சென்னை
தமிழகத்தில் பல ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் இரட்டை பாதை மற்றும் புதிய பாதை களை விரைந்து முடிக்க வேண்டு மென தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சென்னை சென்ட்ரல் அருகி லுள்ள தெற்கு ரயில்வேயின் தலைமை அலுவலகத்தில் தமிழக ரயில் திட்டங்கள் தொடர்பாக எம்.பி.க்களுடன் நேற்று ஆலோசனை நடந்தது.
இதில், தமிழக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, டி.கே.ரங்கராஜன், கே.ஜெயக் குமார், எஸ்.ஆர்.பாலசுப்பிர மணியன், முகமது ஜான் உட்பட பலர் பங்கேற்றனர். தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ராகுல் ஜெயின் உட்பட ரயில்வே உயர் அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர்.
கூட்டத்தில் தமிழக ரயில் திட்டங்கள் மற்றும் பயணிகள் வசதிகளை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
ரயில் நிலையங்களில் கண் காணிப்பு கேமராக்களை பொருத்துதல், நடைமேம்பாலங் கள் அமைப்பது, விரைவு ரயில்கள் நிறுத்தம் வழங்குவது, குடிநீர், கழிப்பிடம் உட்பட அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் குறித்து அந்தந்த தொகுதிகளை சேர்ந்த எம்.பி.க்கள் கோரிக்கை வைத்தனர்.
மேலும், சென்னை - கன்னியாகுமரி இரட்டை பாதை திட்டம், திண்டிவனம் செஞ்சி திருவண்ணாமலை, திண்டி வனம் நகரி புதிய திட்டம், கரூர் ஈரோடு திருச்சி ரயில்பாதை நீட்டிப்பு திட்டம், தண்டையார்பேட்டையில் புதிய முனையம் உள்ளிட்டவை குறித்து தற்போதைய நிலவரம் குறித்தும் விரிவாக பேசப்பட்டன. எம்பிக்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டுள்ள தெற்கு ரயில்வே பரீசிலித்து படிப்படியாக நிறைவேற்றப்படும் என உறுதியளித்துள்ளனர்.
கூட்டத்தின் இறுதியில் சென்னை ரயில் கோட்ட கமிட்டி யின் தலைவராக கதிர்ஆனந்த் எம்.பி., சேலம் ரயில் கோட்ட தலைவராக பி.ஆர்.நட்ராஜன் எம்.பி. ஆகியோர் தேர்வு செய்யப் பட்டு நியமிக்கப்பட்டனர்.