சென்னை
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சென்னையில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த 2,237 விநாயகர் சிலைகள் நேற்று கடலில் கரைக்கப்பட்டன.
சென்னையில் கடந்த 2-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட் டது. அன்று இந்து அமைப்புகள், குடியிருப்போர் நலச்சங்கங்கள் மற்றும் பல்வேறு விநாயகர் சதுர்த்தி விழா குழுக்கள் சார்பில் சென்னை மாநகரம் முழுவதும் 2,237 சிலைகள் வைகத்கப்பட்டன. இதில் 602 சிலைகள் பெரிய அளவில் செய்யப்பட்டவை. இந்தச் சிலைகள் காவல்துறை அனுமதியுடன் சென்னையின் பல்வேறு பகுதகளில் வைக்கப்பட்டிருந்தன.
இந்தச் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைப் பதற்காக பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலை நகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடை மேடை பின்புறம், எண்ணூர் ராமகிருஷ்ணா நகர் ஆகிய 5 இடங்களில் கரைப்பதற்காக காவல்துறை சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கடந்த 4 நாட்களில் 349 சிலைகள் கரைக்கப்பட்டன.
ஞாயிற்றுக்கிழமை என்பதால் நேற்று கடலில் கரைக்க அதிக அளவிலான சிலைகள் கொண்டு வரப்பட்டன. மணலி, வில்லிவாக் கம், செங்குன்றம், திருவேற்காடு, கோயம்பேடு, போரூர், விசாயர் பாடி, பெரம்பூர், கொடுங்கையூர், மாதவரம், கொளத்தூர், திரு வல்லிக்கேணி, எழும்பூர், சிந்தா திரிப்பேட்டை, புதுப்பேட்டை, நுங் கம்பாக்கம், கேகே.நகர், மேடவாக் கம், பல்லாவரம், வேளச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் விநாயகர் சிலைகள் வாகனங்களில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.
அனைத்து இடங்களிலும் காவல் துறை சார்பில் நிறுத்தப்பட்டிருந்த ராட்சத கிரேன்கள் மூலமாக விநாயகர் சிலைகளை தூக்கிச் சென்று கடலில் கரைக்கப்பட்டன.
அனைத்து இடங்களிலும் பல் வேறு ஆன்மிக குழுக்கள் சார் பில் அன்னதானம் மற்றும் குடிநீர் விநியோகிக்கப்பட்டது. பட்டினப் பாக்கம் கடலோரப் பகுதியில் நடைபெற்று வந்த சிலை கரைப்பு பணிகளை, மாநகர காவல் ஆணை யர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் சென்று ஆய்வு செய்தார். மாநக ரின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிலைகள் வாகனங்களில் சாரி சாரியாக வந்ததால், மாநகரம் முழு வதும் பாதுகாப்பு பணியில் 10 ஆயி ரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டனர்.
சிலைகளுடன் வந்த பக்தர்கள் வழி நெடுகிலும் மேள, தாளங்களு டன் உற்சாகமாக நடனமாடியபடி வந்தனர். சிலைகள் ஊர்வலம் வருவதற்காக பல சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப் பட்டிருந்தன.
பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரையில் சுமார் 30 மீட்டர் நீளத்துக்கு கடல் மணல் இருப்ப தால், விநாயகர் சிலைகளை எளி தில் எடுத்துச் சென்று கடலில் கரைப் பதற்காக டிராலி வசதி ஏற் படுத்தப்பட்டு இருந்தது. அதன் மூலம் சிலைகள் கடலுக்கு கொண்டு சென்று கரைக்கப்பட்டன.
மதநல்லிணக்கம்
ராயப்பேட்டை பெருமாள் சன்னதி தெருவில் வைக்கப்பட்டு இருந்த விநாயகர் சிலையை புது கல்லூரியைச் சேர்ந்த முஸ்லிம் மாணவர்கள் மற்றும் பேராசிரியர் கள் ஆகியோர் இணைந்து விநாய கர் சிலையை கரைக்க வழி யனுப்பி வைத்தனர். அனைவருக் கும் இனிப்புகள் மற்றும் அன்ன தானம் வழங்கினர். மேலும் வட சென்னையில், தண்டையார் பேட்டை நாவலர் நகர் பகுதியில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையையும் கடலில் கரைக்க ஏராளமான முஸ்லிம்கள் பங்கேற்று வழியனுப்பி வைத்தனர். அது காண்போரை நெகிழ்ச்சியடைய செய்தது.
சிலைகள் கரைக்கப்படும் 5 இடங்களிலும் சென்னை மாநக ராட்சி சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. நேற்று கடும் வெயில் நிலவிய நிலையில், நீர் சத்து குறைவால் பக்தர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க ஓஆர்எஸ் குடிநீர் வழங்கப்பட்டது. 100-க்கும் மேற்பட்டோருக்கு மருத் துவ பரிசோதனைகளும் செய்யப் பட்டன.
நேற்று நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலங்கள் மற்றும் சிலை கரைப்பு நிகழச்சிகள் அனைத்தும் எந்தவித அசம்பாவிதங்கள் இன்று அமைதியாக நடந்து முடிந்தது. நேற்று ஒரே நாளில் மட்டும் 2,237 சிலைகள் கரைக்கப்பட்டன.