தமிழகம்

அச்சடிக்கப்பட்ட காகிதங்களில் உணவு விற்பனை; 600 வியாபாரிகளுக்கு நோட்டீஸ்: உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை

செய்திப்பிரிவு

சென்னை 

அச்சடிக்கப்பட்ட காகிதங் களில் உணவுப் பொருட் களை விற்பனை செய்த 600 வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்பு துறை நோட்டீஸ் அளித்துள்ளது.

எண்ணெய்யில் பொரித்த உணவுப் பொருட்களான பஜ்ஜி, போண்டா. வடை. முறுக்கு போன்ற திண் பண்டங்கள் சாலையோர கடைகள், டீக்கடைகள் உள் ளிட்டவற்றில் அச்சடிக்கப் பட்ட காகிதங்களில் பொட்ட லமிட்டு நுகர்வோருக்கு வழங்கப்படுகிறது.

இவ்வாறு, அச்சடிக்கப் பட்ட காகிதங்களில் உணவுப் பொருட்களை வழங்குவ தால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, உணவுப் பொருட்களை அச்சடிக்கப் பட்ட காகிதம், செய்தித் தாள்கள், பிளாஸ்டிக், பேப் பர்கள் மற்றும் பிளாஸ்டிக் பைகள் ஆகியவைகளில் கட் டிக் கொடுக்கவோ, பொட்டல மிட்டோ பொதுமக்களுக்கு வழங்குவதை தவிர்க்க வேண்டும். மீறினால் நடவ டிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.சீதா லட்சுமி கடந்த மாதம் எச்சரிக்கை விடுத் தார்.

இதைத்தொடர்ந்து, உணவு பாதுகாப்பு அலுவ லர்கள் மூலம் சென்னை முழுவதும் ஆய்வு செய்யப் பட்டு வருகிறது. ஒரு மாதத்தில் அச்சடிக்கப்பட்ட காகிதங்களில் உணவு பொருட்களை விற்பனை செய்த 600 வியாபாரிகளுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட் டுள்ளது.

இதுதொடர்பாக, உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “ஒரு மாதத்தில் 4 ஆயிரம் கடை களில் ஆய்வு செய்துள் ளோம். 600 பேருக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள் ளது. நோட்டீஸில் அச்சடிக் கப்பட்ட காகிதங்களில் உணவு பொருட்களை விற் பனை செய்யக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.

SCROLL FOR NEXT