தமிழகம்

சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மத்திய அரசு வழங்கும் மானியம் ஆண்டுதோறும் அதிகரிப்பு: மாற்று எரிசக்தியைப் பயன்படுத்த எண்ணெய் நிறுவனங்கள் யோசனை

செய்திப்பிரிவு

ப.முரளிதரன்

சென்னை

சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மத்திய அரசு வழங்கிவரும் மானி யம் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. எதிர்காலத்தில் சிலிண்டர்களின் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில், சூரியஒளி மின் அடுப்புகள் போன்ற மாற்று எரிசக்தி முறைகளை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என அதிகாரிகள் யோசனை தெரிவித் துள்ளனர்.

நாடு முழுவதும் 116 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் உள்ளன. இந்தியன் ஆயில் நிறு வனம், பாரத் பெட்ரோலியம் உள் ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் இந்த சமையல் எரிவாயு சிலிண் டர்களை விநியோகம் செய்கின்றன. சமையல் எரிவாயு சிலிண்டர்களை மத்திய அரசு மானிய விலையில் வழங்கி வருகிறது. ஆரம்பத்தில் சிலிண்டரின் மொத்த விலையில் மானியத் தொகையை கழித்து, குறைந்த விலைக்கு வாடிக்கை யாளர்களுக்கு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டன. இதில் பல மோசடிகள் நடப்பதாக புகார்கள் எழுந்தன.

இதையடுத்து, கடந்த 2014-ம் ஆண்டு, எரிவாயு சிலிண்டருக்கு வழங்கப்படும் மானியத் தொகை வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப் படும் என அறிவிக்கப்பட்டது. அதன் படி தற்போது மானியத் தொகை நுகர்வோரின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வரு கிறது.

இதனிடையே வசதிபடைத் தோர் மானியத் தொகையை விட் டுக் கொடுக்க வேண்டும் என்ற பிரச்சாரத்தை மத்திய அரசு தொடங் கியது. இதையடுத்து, மானியத்தை விட்டுக் கொடுத்தவர்களின் எண் ணிக்கை அதிகரித்தது. எனினும், சிலிண்டருக்கு மத்திய அரசு வழங் கும் மானியமும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து, எண்ணெய் நிறு வன அதிகாரிகள் கூறியதாவது:

சமையல் எரிவாயு சிலிண்டர் களுக்கு மத்திய அரசு வழங்கிவரும் மானியம் ஆண்டுதோறும் அதிகரித்து வருவதால், அரசுக்கு கடும் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது. இதைத் தடுப்பதற்காக, வசதி படைத்தவர்கள் சிலிண்டர் மானி யத் தொகையை விட்டுக் கொடுக்க வேண்டும் என பிரதமர் மோடி அறிவித்தார். இதை ஏற்று பலர் மானியத்தை விட்டுக் கொடுத்தனர்.

கடந்த ஓர் ஆண்டில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற் றும் தெலங்கானா ஆகிய 5 தென் மாநிலங்களில் 22.11 லட்சம் பேர் மானியத்தை விட்டுக் கொடுத் தனர். தமிழகத்தில் 6.50 லட்சம் பேர் மானியத் தொகையை விட்டுக் கொடுத்துள்ளனர். நாடு முழுவதும் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் மானியத்தை விட்டுக் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், மானியத்தை விட்டுக் கொடுப்பவர்களின் எண் ணிக்கை ஒருபக்கம் அதிகரித்து வரும் நிலையில், மற்றொரு புறம் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு வழங்கப்படும் மானியத் தொகையும் அதிகரித்து வருகிறது.

கடந்த 2017-18-ம் ஆண்டில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.21,880 கோடி மானியம் வழங் கப்பட்டது. இது நடப்பு 2019-ம் ஆண்டில் 49.4 சதவீதம் அதிக ரித்து ரூ.31,200 கோடியாக அதிகரித் துள்ளது. வரும் 2020-ம் ஆண்டில் இது ரூ.35,880 கோடியாக அதிக ரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆண்டுதோறும் மானியத் தொகை அதிகரித்து வந்தால் அரசுக்கு கடும் நிதிச் சுமை ஏற்படும். எனவே, மானியத்தை விட்டுக் கொடுக்க, நுகர்வோர் அதிக அளவில் முன்வர வேண்டும். அத்துடன், எதிர்காலத்தில் சிலிண் டர்களின் பயன்பாட்டைக் குறைக் கும் வகையில், சூரியஒளி மின் அடுப்புகள் போன்ற மாற்று எரிசக்தி முறைகளை பொதுமக்கள் பயன்படுத்தத் தொடங்க வேண்டும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

SCROLL FOR NEXT