ந.முருகவேல்
விருத்தாசலம்
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் ஒவ்வொரு ஆண்டும் சுங்கக் கட்டணங்களை மாற்றியமைத்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளன. அதன்படி நடப்பு ஆண்டு செப்டம் பர் 1 முதல் தமிழகத்தில் உள்ள 22 சுங்கச் சாவடிகளில் வாகனங்களுக்கான சுங்கக் கட்ட ணம் ரூ.5 முதல் 15 வரை உயர்த்தி வசூலிக்கப்படுகிறது. இது வாகன ஓட்டிகளிடம் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அதேநேரத்தில் தமிழகத்தில் உள்ள 42 சுங்கச் சாவடிகளில் பணிபுரியும் ஊழியர்களிடத்தில் வேறுவிதமான அதிருப்தி நிலவு கிறது. சுங்கச் சாவடிகளில் பணிபுரி யும் ஊழியர்களுக்கு அடிப்படை ஊதிய விகிதம் நிர்ணயிக்கப்பட வில்லை. அவர்களுக்குத் தேவை யான மருத்துவம், குடிநீர் வசதி, இரவுநேர ஓய்வறை அடிப்படை வசதிகளை சுங்கச் சாவடி ஒப்பந்த தாரர்கள் செய்து தருவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள் ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு சுங்கச்சாவடி பணியாளர்கள் நல சங்க மாநில இணைச் செயலாளர் காரல்மார்க்ஸ் கூறியதாவது: தமிழகம் முழுவதும் உள்ள 42 சுங்கச் சாவடிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரி கின்றனர். மொத்தமுள்ள 42 சுங்கச் சாவடிகளில் 22 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1-ம் தேதி முதலும், எஞ்சிய 20 சுங்கச் சாவடிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதலும் சுங்கக் கட்டணங்கள் மாற்றியமைக்கப் படுகின்றன.
ஆனால் அங்கு பணிபுரியும் பணியாளர்களுக்கு, மத்திய அரசின் தொழிலாளர் நலத் துறையின் பரிந் துரைப்படி குறைந்தபட்ச ஊதியம் கூட வழங்கப்படாமல் ரூ.7,500 வழங் கப்படுகிறது. இதைத் தவிர்த்து போனஸ் 8.33 சதவீதம் வழங்கு கின்றனர்.
எங்களது சங்கம் மூலம் சுங்கச்சாவடி நிர்வாகங்களுக்கு கோரிக்கை கடிதம் கொடுக்கப்பட்டு, பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் சில சுங்கச்சாவடி நிர்வாகத்தினர் மட்டும் குறைந்தபட்ச ஊதியம் வழங்குகின்றனர். பெரும்பாலான சுங்கச்சாவடிகளில் பணிபுரிவோ ருக்கு சட்டப்படியான குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படுவதில்லை. பணியாளர்களுக்கான பாதுகாப்பு இல்லாமை, இஎஸ்ஐ மருத்துவ வசதி, மருத்துவக் காப்பீடு, இரவுப் பணியில் உள்ளவர்களுக்கு ஓய் வறை, சுத்தமான குடிநீர் வசதி, வருங்கால வைப்பு நிதி செலுத்து வதில் முறைகேடு என பல்வேறு குறைபாடுகளுக்கு இடையே பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.
வாகனப் பெருக்கத்தின் காரணமாக சுங்கச் சாவடிகளின் வருவாய் இருமடங்காக உயர்ந் துள்ள நிலையில், இந்த ஆண்டு 45 நாள் ஊதியத்தைக் கணக் கிட்டு போனஸ் வழங்க வேண் டும் என வலியுறுத்தி சுங்கச் சாவடி நிர்வாகங்களுக்கு கடிதம் அளித்துள்ளோம். அவர்களும் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள் ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
இதுதொடர்பாக சுங்கச்சாவடி ஒப்பந்த மேலாளர்களிடம் பேசும் போது, "தற்போது உயர்த்தப்பட் டுள்ள சுங்கக் கட்டணம் உயர்வு என்பது மொத்த விலை கொள் முதல் (WPI -Wholesale Price Index) அடிப்படையில் மாற்றியமைக் கப்படுகிறது. மாறிவரும் பொரு ளாதார மந்த நிலைக்கேற்ப கட்டணம் மாறும். தற்போது அகில இந்திய அளவில் பணவீக்கம் அதிகரித்திருப்பதால் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த 2015-ம் ஆண்டு ஒரு வழி பயணத்துக்கான கட்டணமாக ரூ.50 வசூலிக்கப்பட்டது. அதைய டுத்து 2016 செப்டம்பரில் ரூ.45 வசூ லிக்கப்பட்டது. 2017-ல் எவ்வித மாற்றமுமின்றி வசூலிக்கப்பட்டது.
கடந்த 2018-ல் மீண்டும் ரூ.50-க்கு வசூலிக்கப்பட்டது. அதையடுத்து தற்போது ரூ.5 உயர்த்தப்பட்டு, 55 ரூபாயாக வசூலிக்கப்படுகிறது. சுங்கச்சாவடி பணியாளர்களின் ஊதியம் குறித்து தொழிலாளர் நல அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் அடிப்படையில் 12(3) ஒப்பந்தம் போடப்பட்டு, அதன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது" என்றனர்.பணியாளர்களுக்கான பாதுகாப்பு இல்லாமை, இஎஸ்ஐ மருத்துவ வசதி, மருத்துவக் காப்பீடு, இரவுப் பணியில் உள்ளவர்களுக்கு ஓய்வறை, சுத்தமான குடிநீர் வசதி,வருங்கால வைப்பு நிதி செலுத்துவதில் முறைகேடு என பல்வேறு குறைபாடுகளுக்கு இடையே பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.