சென்னை
நிலவின் விண்கலத்தை தரையிறக் கும் கடைசி 15 நிமிடங்கள் தான் மிகவும் சிக்கலானது. ஏனெனில், லேண்டரின் வேகத்தை குறைத்து பூஜ்ய நிலைக்கு கொண்டு வருவதுதான் பெரும் சிரமம் நிறைந்த பணி. அதை வெற்றிகரமாக முடித்துவிட்டால் விண்கலம் தரையிறங்கும் பணி எளிதாகிவிடும் என இஸ்ரோ தெரிவித்து வந்தது.
அனைத்து தடைகளையும் தாண்டிய நிலையில் விஞ்ஞானிகள் அச்சம் கொண்ட கடைசி 15 நிமிடங்களே நமக்கு பின்னடை வாக அமைந்துவிட்டது. தற்போது தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட லேண்டரின் நிலை பற்றி தொடர்ந்து விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர்.
மேலும், பூமியுடன் லேண்டர் இழந்த தகவல் தொடர்பை மீட்டெடுப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு எனவும், கட்டுப்பாட்டை இழந்து நிலவில் தரைப்பகுதியில் மோதியிருக்க லாம் எனவும் கூறப்படுகிறது.
எனினும், ஓரிரு நாட்களில் அதன் முழு விவரம் நமக்கு தெரிய வரும்.
இதுகுறித்து இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானியான மயில்சாமி அண்ணாதுரை கூறும்போது, ‘‘சந்திரயான்-2 விண்கலம் கிட்டத் தட்ட தன் பணியை வெற்றிகரமாக முடித்துவிட்டது. இறுதிகட்டத்தில் ஏற்பட்ட பின்னடைவு துரதிருஷ்ட வசமானது.
லேண்டரின் தற்போதைய நிலை குறித்து நிலவை சுற்றி வரும் ஆர்பிட்டர் விண்கலம் மற்றும் நாசாவின் விண்கலம் எடுத்தனுப்பும் புகைப்படங்கள் மூலம் ஓரிரு நாட்களில் தெரிந்து கொள்ளலாம். அடுத்தடுத்த திட்டங்களுக்கு இது உதவிகரமாக இருக்கும்’’ என்றார்.