புதுச்சேரி
புதுச்சேரி பிரதேச அமமுகவில் மாநில செயலாளராக மீண்டும் வேல்முருகன் நியமிக்கப்பட்டதால் கட்சி நிர்வாகிகள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து, எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர்.
அமமுக கட்சியின் புதுச்சேரி செயலாளராக மீண்டும் வேல்முருகனை நியமனம் செய்து, அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். ஏற்கெனவே கட்சி நிர்வாகிகளுக்கும், வேல்முரு கனுக்கும் மக்களவைத் தேர்தலில் இருந்து கருத்து வேறுபாடு நிலவி வந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்க கட்சி நிர்வாகிகள் தினகரனுக்கு கடிதம் எழுதி னர். ஆனால் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல், புதுச்சேரி அமமுக செய லாளராக வேல்முருகனை மீண்டும் நியமித்து, கட்சி மேலிடம் உத்தர விட்டுள்ளது.
இதை எதிர்த்து மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட அமமுக வேட்பாளர் தமிழ்மாறன் கூறுகையில், "கட்சி நிர்வாகிகளுக்கு விருப்பம் இல்லாத வேல்முருகன் மீண்டும் மாநில செயலாளராக நியமிக்கப்பட்டதை கண்டித்து முக்கிய நிர்வாகிகள் அனைவரும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்வதாக தீர்மானம் நிறைவேற்றி ராஜினாமா கடிதத்தை தினகரனுக்கு அனுப்பி வைத்துள்ளோம். இக்கடிதத்தில் முக்கிய நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கையெழுத்திட்டுள்ளனர்" என்று குறிப்பிட்டார்.