தமிழகம்

மணக்குள விநாயகர் மருத்துவ கல்லூரி மாணவர்கள் சர்வதேச கருத்தரங்குக்கு தேர்வு

செய்திப்பிரிவு

தென்ஆப்ரிக்காவில் நடைபெறும் சர்வதேச கருத்தரங்கில் பங்கேற்க மணக்குள விநாயகர் மருத்துவ கல்லூரி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தாமஸ் மேத்யூ, சுந்தர் ராஜன், உபேந்திர பற்குண ராஜா, கார்த்திகேயன் ஆகியோர் கொண்ட குழு சமூக மருத்துவத்துறை பேராசிரியரான டாக்டர் அமோல் டாங்கிரி தலைமையின் கீழ் பள்ளி மாணவர்களின் உடல் நலம் சார்ந்த செயல் திட்டத்துக்காக சர்வதேச மாணவர் செயல்திட்ட விருதுக்கான போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 21 மாணவர் களில் 6 பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள். அதில் 4 பேர் புதுச்சேரி மணக்குள விநாயகர் மருத்து வக் கல்லூரி மாணவர்கள் ஆவர். விருதுக்கான போட்டியையொட்டி தி நெட்வொர்க் சுகா தாரத் தின் ஒற்றுமையை நோக்கிய பயணம் எனும் கருத் தரங்கம் தென்ஆப்பிரிக்க சுகாதார கல்வி யாளர்கள் சங்கத்தின் உதவியுடன் வரும் செப்டம்பர் 12 முதல் 16ம் தேதி வரை தென்ஆப்ரிக்காவில் நடக்கிறது.

இந்த சர்வதேச கருத்தரங்கிற்கு தேர்வு பெற்ற 4 மாணவர்களை மணக்குள விநாயகர் கல்வி நிறுவன தலைவர் தனசேகரன், துணைத் தலைவர் சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி, மருத்துவ கல்வி இயக்குநர் ராஜகோவிந்தன், டீன் அமர்நாதன், துணை முதல்வர் வெற்றிக் கொடி ஆகியோர் வாழ்த்தினர்.

SCROLL FOR NEXT