தமிழகம்

கூட்டுறவு பணியாளர்களுக்கு கணினி பயிற்சி

செய்திப்பிரிவு

தமிழகத்தில் உள்ள தொடக்க கூட்டுறவுச் சங்கங்கள் அனைத்தும் கணினி மையமாக்கப்பட்டுள்ளன. இச்சூழலில், தமிழக கிராமப்புறங் களில் உள்ள 4,532 தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கப் பணியாளர்கள் கணினி பயிற்சி அளிக்க முடிவு செய்யப் பட்டது. இதன்மூலம் வாடிக்கை யாளர்களின் தேவையினை பூர்த்தி செய்யும் நோக்கில், தொடக்க வேளாண் மைக் கூட்டுறவுக் கடன் சங்கப் பணியாளர்களுக்கான 3 நாள் கணினி மென்பொருள் பயிற்சி, திருவள்ளூர் மாவட்டம், மாதவரத்தில் உள்ள தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கியின் விவசாயக் கூட்டுறவுப் பணியாளர் பயிற்சி நிலையத்தில் நேற்று தொடங்கியது.

பயிற்சியின் தொடக்க விழாவில், தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு பயிற்சியினை தொடங்கி வைத் தார். இந்த விழாவில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் முதன் மைச் செயலாளர் ஷிவ் தாஸ் மீனா, கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் ஜெயஸ்ரீ முரளிதரன், தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கியின் தலைவர் இளங்கோவன், கூடுதல் பதிவாளர் ராஜேந்திரன், தமிழ் நாடு மாநிலத் தலைமைக் கூட்டு றவு வங்கி மேலாண்மை இயக்கு நர் ராஜசேகர் பங்கேற்றனர். தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கியில் தொலைபேசி வழி வங்கிச் சேவை விரைவில் செயல்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT