தமிழகம்

மின்னணு குடும்ப அட்டையைப் பயன்படுத்தி எந்த ரேஷன் கடையிலும் பொருட்கள் பெறலாம்: திட்டம் விரைவில் தொடங்கும் என அமைச்சர் தகவல்

செய்திப்பிரிவு

திருவாரூர்

மின்னணு குடும்ப அட்டையைப் பயன்படுத்தி அனைத்து ரேஷன் கடைகளிலும் உணவுப் பொருட் களைப் பெறும் திட்டத்தை முதல்வர் விரைவில் தொடங்கி வைப்பார் என்று உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.

திருவாரூரில் நேற்று செய்தி யாளர்களிடம் அவர் கூறியது: கடந்த 3-ம் தேதி டெல்லியில் மத்திய உணவுத் துறை அமைச்சர் தலை மையில் நடைபெற்ற கூட்டத்தில் விவாதிக்கப்படாத சில விஷயங் களை விவாதித்ததாகவும், ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில் தமிழ கம் இணைவதற்குச் சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும், தமிழகத் தின் அடிப்படை உரிமைகளை மத்திய அரசிடம் விட்டுக்கொடுத்து விட்டதாகவும் பல்வேறு குற்றச் சாட்டுகளை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது முற்றிலும் தவறானது.

ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தின் நோக்கம், சொந்த மாநி லத்தை விட்டு வெளி மாநிலங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக் கும் உணவுப்பொருட்கள் கிடைக்க வேண்டும் என்பதுதான். இதில் தவறு ஏதும் இருப்பதாகத் தெரிய வில்லை. இது, தேசிய உணவுப் பாதுகாப்பு திட்டத்தின் ஒருஅங்கம்.

தமிழகத்தில் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம் நடைமுறைக்கு வந்த 2 ஆண்டுகளில், ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டு வரும் பொது விநியோகத் திட்டத்தில் எந்த மாற்ற மும் இன்றி விலையில்லா அரிசி, கோதுமை, மானிய விலையில் சர்க் கரை உள்ளிட்ட இதர பொருட்கள் வழங்கப்படுகின்றன.

இந்தியாவிலேயே தமிழகம் தான் பொது விநியோகத் திட்டத் தைச் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் 1,99,97,000 குடும்ப அட்டைகள் மின்னணு அட் டைகளாக மாற்றப்பட்டு முற்றிலும் கணினி மயமாக்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர்கள் வாங்கும் பொருட்கள் குறித்த விவரங்கள் குறுந்தகவலாக செல்போனுக்கு அனுப்பப்படுகின்றன. இந்நிலை யில், மத்திய அரசிடம் தமிழகத்தின் உரிமைகளை அடகுவைத்து விட்ட தாக கூறுவது ஏற்புடையதல்ல.

தமிழகத்தில் பொது விநியோகத் திட்டம் முழுவதும் கணினி மயமாக் கப்பட்டு உள்ளதால், மின்னணு குடும்ப அட்டையை பயன்படுத்தி எந்த ரேஷன் கடையில் வேண்டுமா னாலும் பொருட்களைப் பெற்றுக் கொள்ளும் திட்டத்தை முதல்வர் விரைவில் தொடங்கி வைக்க உள்ளார் என்றார்.

SCROLL FOR NEXT