சென்னை
போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடும் போலீஸாருக்கு இரட்டிப்பு அபராதம் விதிக்கப்படும் என சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் ஏ.அருண் எச்சரித்துள்ளார்.
விபத்துகளையும், விபத்து உயிரிழப்புகளையும் தடுக்கும் வகையில் போக்குவரத்து போலீ ஸார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
அண்மையில் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் மக்க ளவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதன்படி, ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டினால் ரூ.100 அபராதம் விதிக் கப்பட்டது. இந்த தொகை இனி ரூ.500ஆக உயர்த்தி வசூலிக்கப் படும். அதேபோல் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டினால் ரூ.2 ஆயிரம் அபராதமாக விதிக்கப் பட்டது. அது ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் விரை வில் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. அதற்கான பணியில் போக்குவரத்து போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
கூடுதல் ஆணையர் எச்சரிக்கை
இந்நிலையில், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் போலீஸா ருக்கு இரட்டிப்பு அபராதம் விதிக் கப்படும் என சென்னை போக்கு வரத்து காவல் கூடுதல் ஆணையர் ஏ.அருண் எச்சரிக்கை விடுத்துள் ளார். சாலை விதி மீறல்களில் போலீ ஸார் யாரேனும் ஈடுபடுகிறார் களா? என தீவிரமாக கண்காணிக் குமாறு போக்குவரத்து காவல் இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள், உதவி ஆணையர் கள் கண்காணிக்கவும் அவர் அறிவுரை வழங்கியுள்ளார்.
மேலும் இது தொடர்பான சுற்றறிக்கையையும் அவர் அனுப் பியுள்ளார். சாலை விதிகளை மதிப்பதில் போலீஸார் பொது மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் எனவும் கூடுதல் காவல் ஆணையர் அருண் போலீ ஸாருக்கு அறிவுரை வழங்கி யுள்ளார்.