தமிழகம்

விசாரணைக்கு ஆஜராகாத போலீஸ் அதிகாரிகள்: டிஜிபி, காவல் ஆணையருக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

சென்னை

நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் ஆஜராகாமல் இருந்தால் டிஜிபி, சென்னை காவல் ஆணையர் ஆகியோ ருக்கு எதிராக உத்தரவுகள் பிறப்பிக்க நேரிடும் என சென்னை உயர் நீதி மன்றம் எச்சரித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி பி.வேல்முருகன் முன்பாக ஒரு வழக்கு விசாரணை நடந்தது. அப்போது விசாரணைக்கு ஆஜராக வேண்டிய போலீஸ் அதிகாரி ஆஜராகவில்லை. மேலும் பல வழக்குகளிலும் சம்பந்தப் பட்ட போலீஸ் அதிகாரிகள் பதில் அளிக்காமலும், ஆஜராகாமலும் இருந் தனர். அதையடுத்து நீதிபதி, ‘‘இது தொடர்பாக டிஜிபி திரிபாதி , சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர் செப்.13-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்’’ என நேற்று முன்தினம் உத்தரவிட்டு இருந்தார்.

இந்நிலையில், மாநில தலைமை அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன், நீதிபதி பி.வேல்முருகன் முன்பாக நேற்று ஆஜராகி, டிஜிபியும் காவல் ஆணையரும் நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என்றும், இதுபோல இனிமேல் நடக்காது எனவும் உறுதி அளித்தார். மேலும், உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அனைத்து வழக்கு விசாரணைக்கும் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள், விசாரணை அதிகாரிகள் குறித்த நேரத்தில் ஆஜராக வேண்டும் என டிஜிபியும், போலீஸ் ஆணையரும் தங்களுக்கு கீழ் உள்ள அதிகாரிகளிடம் அறிவுறுத்தியுள்ளனர் என தெரிவித்தார்.

அதையடுத்து நீதிபதி பி.வேல்முரு கன், ‘‘டிஜிபி, சென்னை காவல் ஆணையர் ஆகிய இருவரும் செப்.13-ம் தேதி நேரில் ஆஜராக விலக்கு அளிக் கிறேன். இனிமேல் இதுபோல விசா ரணை அதிகாரிகள் ஆஜராகாமல் இருந் தால் டிஜிபி, ஆணையருக்கு எதிராக கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்க நேரிடும்’’ என எச்சரித்தார்.

SCROLL FOR NEXT