சென்னை
இ-சேவை மையம் மூடப்பட்டதால் மீனவர்கள் தவித்து வருகின்றனர். இ-சேவை மையங்களை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் 11 லட்சம் மீனவர்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மீன்பிடி தடை கால நிவாரணம் ரூ.5,000 (ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டம்), மீன்பிடி குறைந்த கால நிவாரணம் ரூ.5,000 (அக்டோபர் முதல் டிசம்பர் வரை), தேசிய கடல் மீனவர் சேமிப்பு மற்றும் நிவாரண திட்டம் ரூ.4,500 (நவம்பர் முதல் டிசம்பர் வரை) என மீன்வளத் துறையின் சார்பில் ஆண்டுதோறும் நிவார ணத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டங்களுக்காக மீனவர் கள் விண்ணப்பிக்கும்போது ஒவ் வொரு முறையும் ஆதார், ஸ்மார்ட் குடும்ப அட்டை உள்ளிட்ட ஆவ ணங்களை சமர்ப்பித்து வருகின் றனர். இந்த ஆண்டு மீனவர்களின் ஆவணங்களை இ-சேவை மையங்கள் மூலம் பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. பதிவேற்றம் செய்யப்படும் விண் ணப்பங்களை ஆதாருடன் இணைக் கும் பணி தீவிரமாக நடந்து வரு கிறது.
இந்நிலையில், நீலாங்கரை, சின்னாண்டிகுப்பம் உள்ளிட்ட பகுதி களில் வசிக்கும் மீனவர்களுக்காக குறைந்த கட்டணத்தில் இ-சேவை மையத்தை தொடங்க கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக் கையின் அடிப்படையில் கடந்த ஜூன் மாதம் சின்ன நீலாங்கரை பேருந்து நிலையம் பின்புறம் மீன்வளத் துறை உதவி இயக்கு நர் அலுவலகம் அருகேயுள்ள கட்டிடத்தில் இ-சேவை மையம் தொடங்கப்பட்டது.
ஆனால், 10 நாட்கள் மட்டுமே செயல்பட்ட அந்த இ-சேவை மையம் மூடப்பட்டது. இதனால், நிவாரணத் தொகை பெறுவதற்கான ஆவணங்களை ஆன்லைனில் பதிவேற்ற முடியாமல் மீனவர்கள் தவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக, சின்னாண்டி குப்பத்தை சேர்ந்த மீனவர் எல்.லட்சுமி கூறியதாவது:
நிவாரணத்தொகையை பெற இ-சேவை மையத்தின் மூலம் தான் விண்ணப்பிக்க வேண்டும் என்று மீன்வளத் துறை உத்தர விட்டுள்ளது. எங்கள் கோரிக் கையை ஏற்று சின்னநீலாங்கரை யில் உள்ள மீன்வளத் துறை உதவி இயக்குநர் அலுவலகம் அருகில் இ-சேவை மையம் தொடங்கப்பட்டது. ரூ.10-க்கு விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வந்தது.
10 நாட்கள் மட்டுமே அந்த இ-சேவை மையம் செயல்பட்டது. பின்னர் எந்தவித அறிவிப்பும் இன்றி திடீரென அது மூடப்பட்டது. இதனால், உதவி தொகைக்கு விண்ணப்பிக்க 8 கி.மீ தாண்டி செல்ல வேண்டியுள்ளது. பிற இ-சேவை மையங்களில் அதிக கட்டணம் கேட்கின்றனர்.
விண்ணப்பிக்க இயலவில்லை
இ-சேவை மையம் இல்லாத தால் நிவாரணத்தொகைக்கு மீன வர்களால் விண்ணப்பிக்க இயல வில்லை. எனவே, மீனவர்களுக் காக பிரத்யேகமாக அமைக்கப்பட்ட இ-சேவை மையத்தை மீண்டும் திறக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுதொடர்பாக, மீன்வளத் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, "மீனவ கிராமங்களுக்கு நேரடியாக சென்று கணினி மூலம் ஆவணங்களை பதிவேற்றம் செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
இப்பணிகள் முடிந்தவுடன் நிரந்தரமாக அதே இடத்தில் இ-சேவை மையத்தை திறக்க நட வடிக்கை எடுக்கப்படும்" என்றார்.