சென்னை
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனைத்து மாவட்டங்களிலும் அடுத்த சில தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ந.புவியரசன் கூறியதாவது:
தென்மேற்கு பருவக் காற்று காரணமாக கேரளா மற்றும் கடலோர கர்நாடக பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதன் தாக்கத்தால், மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களான கோவை, நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் அடுத்த சில தினங்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலில் இருந்து வீசும் காற்றுகள் சந்திக்கும் பகுதி தமிழகத்தில் நிலவுகிறது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அடுத்த சில தினங்களுக்கு ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள் ளது. சென்னையில் பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப் படும். மாலை அல்லது இரவு நேரங் களில் மழை பெய்யக்கூடும்.
புதன்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அள களின்படி அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 7 செ.மீ, கோவை மாவட்டம் வால்பாறை, நீலகிரி மாவட்டம் கூடலூர் சந்தை, நடுவட்டம் ஆகிய இடங்களில் தலா 6 செ.மீ, கன்னியாகுமரி மாவட் டம் கீழ்கோதையார், கோவை மாவட்டம் சின்னகள்ளார் ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ, கடலூர் மாவட்டம் சிதம்பரம், கன்னியா குமரி மாவட்டம் பேச்சிப்பாறை, தேனி மாவட்டம் பெரியாறு, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு ந.புவியரசன் கூறினார்.