சென்னை
இரண்டாவது ஆண்டாக நடத்தப் பட்ட விடியம் கிச்சன் அப்ளையன் சஸ் வழங்கும், ‘தி இந்து' நமது மாநிலம் நமது சுவை சமையல் போட்டியில் சென்னையைச் சேர்ந்த எஸ்.கே.காயத்ரி ‘தமிழ் நாடு மாஸ்டர் செஃப்' பட்டம் வென்றார்.
இதுகுறித்து வெளியிடப் பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:
விடியம் கிச்சன் அப்ளையன்சஸ் வழங்கும், 'தி இந்து' நமது மாநிலம் நமது சுவை சமையல் போட்டி கடந்த 2 மாதங்களாக 15 நகரங்களில் நடைபெற்று வந்தது. சமையல் கலைஞர் தாமோதரன் அந்தந்த நகரங்களுக்குச் சென்று போட்டியில் பங்கேற்றவர்கள் தயாரித்த உணவுகளை சுவைத்து வெற்றியாளர்களைத் தேர்வு செய்தார். சுமார் 4 ஆயிரம் பேர் பல்வேறு வயது பிரிவுகளில் இப்போட்டியில் பங்கேற்றனர்.
ஒவ்வோர் ஊரிலும் வெற்றி யாளர்களைத் தேர்வுசெய்து அவர் களில் 50 பேருக்கு சென்னை எழும்பூரில் உள்ள ஒரு ஹோட் டலில் இறுதிப் போட்டி நடத்தப் பட்டது.
இதில் சென்னையைச் சேர்ந்த எஸ்.கே.காயத்ரி முதலிடம் பெற்று ‘தமிழ்நாடு மாஸ்டர் செஃப்' பட்டம் வென்றார். காயத்ரி தேவி குணசீலன் 2-ம் இடமும், ஜி.செல்வராணி 3-ம் இடமும் பிடித்தனர். இவர்கள் ரொக்கப் பரிசுகளைப் பெறுகின்றனர்.
இறுதிப் போட்டியில் தலைமை விருந்தினராக பங்கேற்ற தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன், ‘‘கடவுளுக்கு முதலில் உணவைப படைத்து பின்பு உண்பதே நமது தமிழ் கலாச்சாரமாகும். பண்டைய காலத்திலேயே தமிழர்கள் சமை யல் கலையில் சிறந்து விளங்கி உள்ளனர். ‘பிட்சா', ‘ஃபிரைட் ரைஸ்' போல நமது தமிழக உணவு வகைகளையும் உலக அளவில் புகழ்பெற செய்ய வேண்டும்’’ என்றார்.