சென்னை
வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளிட்ட விவரங்களை சம்பந்தப் பட்ட வாக்காளரே புதிய செயலி மூலம் திருத்தம் செய்வது எப்படி? என்பது குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம் அளித்தார்.
இதுகுறித்து தலைமைச் செயல கத்தில் அவர் நேற்று செய்தியாளர் களிடம் கூறியதாவது: தமிழ்நாடு வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளிட்ட விவரங்களை சம்பந்தப் பட்ட வாக்காளரே திருத்திக் கொள்வ தற்கான புதிய செயலி கடந்த 1-ம் தேதியில் இருந்து செயல்பாட்டில் உள்ளது. என்.வி.எஸ்.பி. என்ற இணையதளத்தில் நுழைந்து, முதலில் ஓட்டர்ஸ் ஹெல்ப்லைன் (Voters Helpline) என்ற செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்
அந்த செயலிக்குள் நுழையும் போது, வாக்காளரின் செல்போன் எண் உள்ளிட்ட விவரங்கள் கேட்கப் படும். அந்த விவரங்களை பதிவு செய்த பின்னர் வாக்காளர் பட்டிய லில் தேவையான திருத்தங்களைச் செய்து, அத்துடன் இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள ஆவணத்தையும் கண்டிப்பாக பதி வேற்றம் செய்ய வேண்டும்.
அவ்வாறு செய்துவிட்டால், வாக்காளர் செய்த திருத்தம், தக வல் சேர்ப்பு உள்ளிட்ட விவரங்கள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அலு வலரின் "லாக்-இன்-க்கு" தானாகச் சென்றுவிடும். பின்னர், வாக்காள ரின் வீட்டுக்கு வாக்குச்சாவடி அலுவலர் நேரில் சென்று, வாக் காளர் பதிவேற்றம் செய்த ஆவணங் களை சரிபார்த்து தகவல்களை உறுதி செய்வார்.
அதைத்தொடர்ந்து வாக்காளர் கோரும் திருத்தங்கள் வாக்காளர் பட்டியலில் செய்யப்படும். அக் டோபர் 15-ம் தேதி வெளியிடப்படும் வரைவு வாக்காளர் பட்டியலைப் பார்த்து வாக்காளர்கள் தாங்கள் செய்த திருத்தங்களை உறுதிப் படுத்தி கொள்ளலாம்.
இவ்வாறு சத்யபிரதா சாகு கூறினார்.