தமிழகம்

தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் விசாரிக்கப்பட வேண்டும்: வாசன் 

செய்திப்பிரிவு

விருத்தாச்சலம்

தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அமலாக்கத்துறை மற்றும் நீதிமன்றங்கள் மூலம் விசாரிக்கப்பட வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று விருத்தாச்சலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''தியேட்டர்களில் ஆன்லைன் மூலம் மட்டுமே டிக்கெட்டுகள் விற்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுகுறித்து தமிழக அரசு, திரையரங்க உரிமையாளர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும்.

ஆன்லைன் டிக்கெட் விற்பனையைப் பொறுத்தவரையில், தயாரிப்பாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அத்தனை பேரும் அரசுடன் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டும். அரசு அதற்கான சந்திப்பை விரைவில் ஏற்படுத்தும் என நம்புகிறேன்.

தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அமலாக்கத்துறை மற்றும் நீதிமன்றங்கள் மூலம் விசாரிக்கப்பட வேண்டும்'' என்றார் ஜி.கே.வாசன்.

திரையரங்குகளைப் பொறுத்தவரையில், பண்டிகை காலங்களில் வெளியாகும் படங்கள், பிரபலங்களின் திரைப்படங்களுக்கு கூடுதல் காட்சிகள், அதிக விலைக்கு தியேட்டரில் டிக்கெட் விற்பனை என பல புகார்கள் உள்ளன. தேவராஜ் என்பவர் திரைப்படங்களுக்கு வசூலாகும் வரவு குறித்தும், கூடுதல் கட்டணம் குறித்தும் வழக்கு தொடுத்து அது உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இதற்கிடையில் டிக்கெட் விற்பனையில் தரக்கட்டுப்பாடு அமலுக்கு வரும், திரைப்பட டிக்கெட்டுகள் ஆன்லைனில் மட்டுமே விற்பனை செய்யப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜு அண்மையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT