தமிழகம்

இந்து மதத்தை கொச்சைப்படுத்தும் நிலை தமிழகத்தில் அதிகம்: இலங்கை எம்.பி. யோகேஸ்வரன் வேதனை

செய்திப்பிரிவு

தேனி

இந்துக்கள் சிலரே தங்கள் மதத்தை கொச்சைப்படுத்தும் நிலை தமிழ் நாட்டில்தான் அதிகமாக உள் ளது என இலங்கை எம்.பி. யோகேஸ்வரன் வேதனை தெரி வித்தார்.

தேனியில் இந்து எழுச்சி முன் னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது. இதில் இலங்கை நாடாளுமன்ற உறுப் பினர் யோகேஸ்வரன் கலந்து கொண்டு பேசியதாவது:

இந்தியா என்பது இந்து மக்கள் ராஜ்ஜியம். இதை யாரும் மாற்ற வோ, மறுக்கவோ முடியாது. இலங்கையில் ஆன்மிகத்துக்கு அஸ்திவாரம் இட்டது தமிழ்நாடு. ஏனென்றால் இலங்கை ஒரு சிவ பூமி. இலங்கையில் ஆன்மிகம் வளர்ந்திருப்பது போல தாய் மண்ணான தமிழகத்திலும் ஆன்மிகம் மேலோங்கி இருக்கிறது.

கடந்த காலங்களில் மத, இன ரீதியாக ஒன்றுபட விநாயகர் சதுர்த்தி விழா உதவி இருக்கிறது. மக்கள் எல்லோரும் நாங்கள் இந்து என்ற உணர்வோடு வாழ முற்பட வேண்டும். ஓர் இந்து எல்லா மத மக்களிடத்திலும் பற்றுள்ளவராக இருந்தாலும் சொந்த மதத்திலும் ஈடுபாடு உள்ளவராக இருக்க வேண்டும்.

இலங்கையில் இந்துக்கள் எப்போதும் இந்து சமயப் பற்றாள ராக இருக்கிறார்கள். அது மட்டு மல்ல. அங்கு அரசியலை நிர்ண யிக்கக் கூடியவர்களாகவும் இருக் கிறார்கள். இந்து என்றால் சைவத் தின் உள்ளடக்கம்.

சைவம் என்றால் தமிழ். தமிழர் கள் அனைவரும் சைவர்கள்தான். அதைப் பின்பற்றாவிட்டால் அவர் கள் தமிழர்கள் என்று கூற அருகதை அற்றவர்கள். இவர்கள் நாத்திகம் பேசிக்கொண்டு நாங்கள் தமிழர்கள் என்று வாழ்ந்து கொண்டி ருக்கிறார்கள்.

ஆண்டவன் இல்லை,கோயிலை இடிப்போம் என்று சிலர் இங்கு கூறிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் தமிழர்கள் என்று கூக்குர லிடுவதால் எவ்விதப் பலனு மில்லை. சகோதர மதத்தைச் சேர்ந்தவர்கள் இனத்தையும், மதத்தையும் ஒன்றாக வைத்திருக் கிறார்கள். ஒருபோதும் அவர்கள் தங்கள் மதத்தைக் கொச்சைப் படுத்த மாட்டார்கள். ஆனால், இந்து மதத்தில் இதுபோன்ற நிலை உள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் இது அதிகமாக உள்ளது. இதில் மாற்றம் வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் இந்து எழுச்சிப் பேரவை மாநிலத் தலைவர் சந்தோஷ்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT