காரைக்கால்
பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களுக்கு இந்தியப் பொருளாதாரத்தைப் பாதுகாக்கும் எண்ணமில்லை என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
காரைக்கால் மாவட்டம் காசாகுடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் 9% ஜிடிபி வளர்ச்சி இருந்த நாடு, இப்பொழுது இந்த 4 மாதத்தில் 5 சதவீதமாகக் குறைந்திருக்கிறது.
பிரதர் மோடி, மத்திய அமைச்சர்கள் என இப்போது ஆட்சியில் உள்ள அனைவருக்கும் இந்தியப் பொருளாதாரத்தை எப்படிப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லை.
அவர்கள் அனைவரும் அரசியல் கட்சித் தலைவர்களை எப்படிப் பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் வேலை செய்கிறார்கள். நிர்வாகத்தில் கவனம் செலுத்துவதில்லை. இந்தியப் பொருளாதாரம் இன்னும் மந்த நிலைக்கு வரும். அதனால் நமது மாநிலமும் பாதிக்கப்படும்.
இதனால் நாங்கள் முடங்கி செயல்பட வேண்டிய நிலையில் உள்ளோம்'' என்று நாராயணசாமி தெரிவித்தார்.