திருநெல்வேலி
முதல்வரின் வெளிநாட்டு பய ணத்தை விமர்சிப்பது எதிர்க்கட்சி களின் கீழ்த்தரமான அரசியலை காட்டுகிறது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரி வித்தார்.
விடுதலை போராட்ட வீரர் பூலித்தேவன் 304-வது பிறந்த நாளை முன்னிட்டு திருநெல்வேலி மாவட் டம் நெற்கட்டும்செவலில் உள்ள அவரது சிலைக்கு துணை முதல் வர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி னார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
சுதந்திர போராட்டத்தை தீவிரப் படுத்தி, நாம் சுதந்திர காற்றை சுவாசிக்க அடிப்படை ஆதாரமாக இருந்தவர் பூலித்தேவன். அவ ருக்கு உறுதுணையாக ஆதிதிரா விட தளபதிகளும் இருந்துள்ளனர்.
தமிழக முதல்வரின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் குறித்து பல்வேறு விமர்சனங்களை எதிர்க்கட்சியினர் கூறி வருகின்றனர். கீழ்த்தரமான அரசியலில் தங்களின் முத்திரையை பதிக்க வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சியினர் இதுபோல் சொல்கின்றனர்.
முதல்வர் தனது வெளிநாட்டு சுற்றுப்பயணம் குறித்து ஏற்கெனவே ஆதாரபூர்வமான, உண்மையான காரணங்களை கூறியுள்ளார்.
இடைத்தேர்தல்களில் வெல்வோம்
நாங்குநேரி, விக்கிர வாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றிபெறும்.
இவ்வாறு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஓ.எஸ்.மணியன், கடம்பூர் ராஜு, வி.எம்.ராஜலெட்சுமி, ஜி.பாஸ்கரன் மற்றும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.