தமிழகம்

பணியில் இருக்கும் டாக்டர்கள் மீது தாக்குதல் நடத்தினால் 10 ஆண்டு சிறை: புதிய சட்டம் கொண்டுவருகிறது மத்திய அரசு 

செய்திப்பிரிவு

சென்னை

பணியில் இருக்கும் டாக்டர்கள் மீது தாக்குதல் நடத்தினால் 10 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கும் புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டுவருகிறது.

நாடு முழுவதும் பணியில் இருக்கும் டாக்டர்கள் மீது தாக்கு தல் நடத்தும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. கடந்த ஜூன் மாதம் கொல்கத் தாவில் பயிற்சி டாக்டர் மீது நடத் தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து நாடு முழுவதும் டாக்டர்கள் தர்ணா, ஆர்ப்பாட்டம், வேலை நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங் களில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே, ‘நாட்டில் 75 சத வீத டாக்டர்கள் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். மருத்துவமனை களும் தாக்குதலில் பாதிக்கப்படு கின்றன. டாக்டர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் மருத்துவ மனைகள் பாதுகாப்புச் சட்டத்தை உடனடியாக மத்திய அரசு அமல் படுத்த வேண்டும். போக்சோ சட்டம் சொல்லும் விதிமுறைகளை இந்தச் சட்டத்தில் இணைக்க வேண் டும்’ என்று மத்திய அரசுக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்சிஐ) கோரிக்கை வைத்தது. இதையடுத்து, புதிய சட்டத்தை கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்தப் புதிய சட்டம் குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறும்போது, ‘‘டாக் டர்கள் மீது நடத்தப்படும் தாக்கு தல் சம்பவத்தை புறக்கணித்துவிட முடியாது. இதற்கு கண்டிப்பாக முடிவு கட்ட வேண்டும். மத்திய அரசு இதற்காக புதிய சட்டம் கொண்டு வருகிறது. இதுதொடர் பாக ஏற்கெனவே நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி விட்டோம். விரைவில் வரைவு மசோதா தாக்கல் செய்யப்பட்டு பொது மக்களிடம் கருத்து கேட்கப்படும். அதன்பின்னர், மத்திய சுகாதார அமைச்சகம் இறுதி முடிவு எடுக்கும். டாக்டர்கள் மீது நடத் தப்படும் தாக்குதலுக்கு எதிரான மசோதா நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும்’’ என்றார்.

‘இந்தப் புதிய சட்டத்தின்படி டாக்டர்கள், மருத்துவப் பணியாளர் கள் மீது தாக்குதல் நடத்துபவர் களுக்கு 3 முதல் 10 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும் என வரைவு மசோதாவில் தெரி விக்கப்பட்டு உள்ளது. இவைதவிர ரூ.2 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும். மருத்துவமனைகள் மீது நடத்தப் படும் தாக்குதலுக்கு கடும் நட வடிக்கை எடுக்கவும் பரிந்துரைக் கப்பட்டுள்ளது’ என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT