பாஜக சார்பில் “தேசிய ஒற்றுமை பிரச்சாரத்துக்கான” பயிலரங்கம் தி.நகரில் உள்ள கமலாலயத்தில் நேற்று நடைபெற்றது. இதில், தேசிய பொதுச் செயலாளர் முரளிதர ராவ், தேசிய செயலாளர் எச்.ராஜா, மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.படம்: ம.பிரபு 
தமிழகம்

காஷ்மீர் விவகாரத்தில் திமுக இரட்டை நிலை: பாஜக பொதுச்செயலாளர் முரளிதர ராவ் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

சென்னை

காஷ்மீர் விவகாரத்தில் திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் இரட்டை நிலைப்பாட்டுடன் செயல் படுவதாக பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதர ராவ் குற்றம் சாட்டியுள்ளார்.

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற கொள்கையை பொதுமக்களிடம் பரப்புவதற்காக பாஜக நிர்வாகி களுக்கு, ‘தேசிய ஒற்றுமை இயக்கம்’ என்ற பெயரில் சிறப்பு பயிலரங்கம் இந்தியா முழுவதும் நடத்தப்பட உள்ளது. இந்த பயிலரங்கத்தின் தொடக்கவிழா சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது.

இதில் கலந்து கொள்வதற்காக பாஜக தேசிய பொதுச் செயலா ளர் முரளிதர ராவ் நேற்று சென்னை வந்தார். தி.நகரில் உள்ள பாஜக வின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர் களிடம் அவர் கூறும்போது, “காஷ் மீர் விவகாரத்தில் திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் இரட்டை நிலைப்பாட்டுடன் செயல்படுகின் றன. தமிழகத்தில் பெண்களுக்காக வும், இட ஒதுக்கீட்டுக்காகவும் போராட்டம் நடத்தும் திமுக உள்ளிட்ட கட்சிகள், காஷ்மீரில் பெண்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கிடைக்கும் சலுகை களை எதிர்க்கின்றன” என்றார்.

பின்னர் நடைபெற்ற தேசிய ஒற்றுமை இயக்கம் என்ற பெயரிலான இந்த பயிலரங்கில் தென்னிந்திய மாநிலங்களான தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா மற்றும் யூனி யன் பிரதேசங்களான புதுச்சேரி, அந்தமான் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சுமார் 80 பேர் இதில் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பாஜக தேசிய பொதுச் செயலா ளர் முரளிதர ராவ், தேசியச் செய லாளர் பி.எல்.சந்தோஷ் ஆகியோர் தலைமையில் பயிற்சி அளிக்கப் பட்டது.

தமிழகத்தின் சார்பில் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், முன்னாள் மத் திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், தேசியச் செயலா ளர் எச்.ராஜா, இல.கணேசன் உட் பட பலர் பயிலரங்கத்தில் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து பாஜகவின் உயர்மட்டக் குழு கூட்டமும் நடத்தப்பட்டது.

SCROLL FOR NEXT