கோவில்பட்டி
`கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு விரைவில் புவிசார் குறியீடு கிடைக் கும்’ என தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.
கோவில்பட்டியில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறிய தாவது: நெடுஞ்சாலைத் துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு தூத்துக்குடி மாவட்டத் தில் சாலை பணிகளுக்காக ரூ.140 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளது. இதனால் அனைத்து சாலை களும் தரத்தோடு பராமரிக்கப்படும் நிலையை தூத்துக்குடி மாவட்டம் பெற்றிருக்கிறது.
கோவில்பட்டி கடலைமிட் டாய்க்கு புவிசார் குறியீடு கேட்டு மாநில அரசு, மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளது. விரைவில் புவிசார் குறியீடு கிடைக்கும்.
தமிழக முதல்வரின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை திமுக தலைவர் ஸ்டாலின் கொச்சைப்படுத்தி பேசி உள்ளார். ஆனால், முதல்வர் லண்டன் சென்றவுடன் அங்கு மருத் துவத் துறையில் 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட் டுள்ளார். அதேபோல் அமெரிக்கா, ஐக்கிய நாடுகள், துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்குச் சென்று அங்குள்ள தொழில் முதலீட் டாளர்களை சந்தித்து முதலீடு களை தமிழகத்துக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
திமுக தனது ஆட்சிக்காலத்தில் செய்யத் தவறியதையெல்லாம் அதிமுக அரசு செய்து கொண்டி ருக்கிறது. தமிழகத்தின் ‘பிக் பாஸ்’ அதிமுக மட்டும்தான் என்றார்.