சென்னையில் நேற்று மாலை பெய்த மழையால் சாலையில் தேங்கிய நீரை சிதறடித்தபடி சீறிச்செல்லும் வாகனங்கள். இடம் காமராஜர் சாலை.படம்: ம.பிரபு 
தமிழகம்

சென்னை மற்றும் புறநகரை மீண்டும் குளிர்வித்த மழை

செய்திப்பிரிவு

சென்னை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று காலை முதல் வெப்பம் வாட்டி வந்த நிலையில், மாலையில் பெய்த மழையால் பூமி குளிர்ந்தது.

சென்னையில் கடந்த வாரம் முழுவதும் வறண்ட வானிலை நிலவியது. பகல் நேரத்தில் கடும் வெயில் வாட்டி வந்தது. இதற்கிடையில் கடந்த புதன்கிழமை மாலை திடீரென மழை பெய்து, சென்னை மற்றும் புற நகர் பகுதிகளில் பூமி குளிர்ந்தது. அதனைத் தொடர்ந்து வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை கடும் வெயில் வாட்டியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். இரவு நேரங்களில் புழுக்கமும் நிலவியது.

இதற்கிடையே சென்னை மற்றும் புறநகர் பகுதி களில் நேற்று மாலை திடீரென மழை பெய்தது. இடி, மின்னலுடன் சுமார் 30 நிமிடங்கள் வரை மழை நீடித்தது. சாலைகளில் மழைநீர் தேங்கியது. இதனால் சில இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 3 நாள் விடுமுறை யில் சொந்த ஊர்களுக்கு கார் உள்ளிட்ட வாகனங்களில் புறப்பட்டவர்கள், திடீர் மழையால் சிரமத்துக்குள்ளாயினர்.

SCROLL FOR NEXT