அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்: கோப்புப்படம் 
தமிழகம்

கால்நடைத்துறையில் உள்ள காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

செய்திப்பிரிவு

சென்னை

கால்நடைத்துறையில் உள்ள காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என, தமிழக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கால்நடை பராமரிப்புத் துறையின் ஆய்வுக்கூட்டம் சென்னை நந்தனத்தில் உள்ள இயக்குநர் அலுவலகத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், தமிழக மாணவர்கள் கால்நடைத்துறையில் புதிய தொழில்நுட்பங்களை படித்து புரிந்துகொள்ளும் வகையில், நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இதற்காக ஆஸ்திரேலியா சென்று அங்குள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்படும் எனவும், அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கால்நடை ஆய்வாளர்களுக்கான 1,214 இடங்களில், ஏறத்தாழ 694 பேர் ஏற்கெனவே நிரப்பப்பட்டுள்ளார்கள் எனவும், மீதமுள்ள 530 இடங்கள் விரைவில் நிரப்பப்படும் எனவும், அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அதற்கான தொடக்கக்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். உதவியாளர்களுக்கான 2,417 காலியிடங்களும் விரைவில் நிரப்பப்படும் எனவும் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT