தமிழகம்

திருச்செந்தூரில் ஆவணித் திருவிழா தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

செய்திப்பிரிவு

தூத்துக்குடி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழா வில் நேற்று தேரோட்டம் நடை பெற்றது.

இத்திருவிழா கடந்த 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி யது. திருவிழா நாட்களில் தினமும் காலையிலும், மாலையிலும் சுவாமி, அம்மன் தனித்தனி வாகனங் களில் எழுந்தருளி வீதியுலா நடை பெற்றது.

முக்கிய நிகழ்ச்சியான தேரோட் டம் 10-ம் நாள் திருவிழாவான நேற்று நடைபெற்றது. காலை 5.40 மணிக்கு திருவாவடுதுறை ஆதீ னம் மத் சாமிநாத தம்பிரான் சுவாமிகள் மற்றும் கோயில் இணை ஆணையர் சி.குமரதுரை ஆகியோர், விநாயகர் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

தொடர்ந்து, காலை 6.15 மணிக்கு வள்ளி, தெய்வானை அம்பாளுடன் சுவாமி குமரவிடங்கப்பெருமான் எழுந்தருளிய பெரிய தேரோட்டம் நடைபெற்றது. ‘அரோகரா’ கோஷம் முழங்க ஆயிரக்கணக்கான பக் தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். 4 ரதவீதிகளை வலம் வந்த தேர், காலை 7.15 மணிக்கு நிலைக்கு வந்தது. காலை 7.20 மணிக்கு அம்மன் தேர் இழுக்கப்பட்டது.

தொடர்ந்து, இரவில் சுவாமி, அம்மன் பெரிய பல்லக்குகளில் எழுந்தருளி வீதி வலம் வந்து மேலக்கோயில் சேர்ந்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி உட்பட பல்வேறு ஊர்களில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

SCROLL FOR NEXT