சென்னை
பெசன்ட்நகர் வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் நேற்று தேர் பவனி நடைபெற்றது.
சென்னை பெசன்ட் நகரில் உள்ள அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயத்தின் 47-ம் ஆண்டு திருவிழா நேற்று தொடங்கியது. ‘இறைவனின் நற்கருணை பேழை மரியாள்’ என்ற தலைப்பில் இந்த ஆண்டு விழா கொண்டாடப் படுகிறது.
திருவிழாவின் தொடக்கமாக நேற்று மாலையில் தேர் பவனி நடைபெற்றது. சென்னை - மயிலை உயர் மறைமாவட்டத்தின் பேராயர் டாக்டர் ஜார்ஜ் அந்தோணிசாமி தேர் பவனியைத் தொடங்கி வைத்தார். ஆலய வளாகத்தில் தொடங்கிய தேர் பவனி, பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரைச் சாலை வழியாகச் சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.
இதைத் தொடர்ந்து ஆலய வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி திருவிழா கொடியை ஏற்றி வைத் தார். இதையடுத்து, விழா தொடங்கி சிறப்பு கூட்டு திருப்பலி நடத்தப்பட்டது. விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பெசன்ட்நகர் வேளாங்கண்ணி ஆலய பங்கு தந்தை வின்சென்ட் சின்னதுரை தலைமையில் செய்து இருந்தனர்.
நேற்று தொடங்கிய வேளாங் கண்ணி மாதா ஆலய திருவிழா வரும் 8-ம் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது. இன்று (30-ம் தேதி) இளையோர் விழா, நாளை பக்த சபைகள் விழா, செப்டம்பர் 1-ம் தேதி நற்கருணை பெருவிழா, 2-ம் தேதி தேவ அழைத்தல் விழா, 3-ம் தேதி உழைப்பாளர் விழா, 4-ம் தேதி நலம் பெறும் விழா, 5-ம் தேதி ஆசிரியர்கள் விழா, 6-ம் தேதி குடும்ப விழா, 7-ம் தேதி அன்னையின் ஆடம்பர தேர் பவனி திருவிழா, 8-ம் தேதி அன்னையின் பிறந்தநாள் மற்றும் திருத்தலத்தின் 47-வது ஆண்டு விழா என 11 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது.
ஒவ்வொரு நாளும் தினமும் காலை, மாலை வேளைகளில் சிறப்பு திருப்பலிகள் தமிழ் மற் றும் ஆங்கிலத்தில் நடைபெறுகின் றன. செப்டம்பர் 8-ம் தேதி கொடி இறக்கத்துடன் விழா நிறைவடை கிறது.
தேர் பவனியை முன்னிட்டு அடையாறு காவல் துணை ஆணை யர் பகலவன் தலைமையில் ஆலய வளாகத்தைச் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. பல இடங்களில் புதிதாக கண்காணிப்பு கேமராக்களும் வைக்கப்பட்டு இருந்தன.
சென்னை, காஞ்சிபுரம், திருவள் ளூர் மற்றும் சுற்றுப்புற மாவட் டங்களில் இருந்து சுமார் 5 லட்சம் பேர் ஆலய திருவிழாவுக்கு வந்து சென்றனர். இதில், சுமார் ஒரு லட்சம் பேர் பல கிலோ மீட்டர் தூரம் நடந்தே ஆலயத்துக்கு வந்தனர்.
ஆலயத்துக்கு நடந்து வருபவர் களின் வசதிக்காக சாந்தோம் நெடுஞ்சாலையில் இருந்து பெசன்ட் நகர் ஆலயம் வரை சாலை ஓரத் தில் பேரிங்கார்டுகள் வைத்து தனி நடைபாதை வசதி ஏற்படுத் தப்பட்டு இருந்தது. நடந்து செல்பவர் களுக்கு உதவும் வகையில் ஆங் காங்கே தண்ணீர், உணவுகளை பலர் இலவசமாக வழங்கினர்.
கூட்டத்தில் காணாமல் போகும் குழந்தைகளை எளிதாகக் கண்டு பிடிக்கும் விதத்தில் அவர்களின் கைகளில் பெற்றோரின் பெயர் மற்றும் செல்போன் எண் எழுதப் பட்டு கைகளில் கட்டும் பணியை போலீஸார் செய்திருந்தனர். நான்கு இடங்களில் போலீஸ் பூத் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழி காட்டப்பட்டது.