வரிசைகட்டி நிற்கும் குப்பைத் தொட்டிகளால் அசுத்தத்தின் பிடியில் சிக்கியுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கும் எல்லீஸ் சாலை முனை. படம்: பு.க.பிரவீன் 
தமிழகம்

வரிசைகட்டும் குப்பைத் தொட்டிகள்; சுகாதாரமற்ற சாலையோர உணவகங்கள்- அசுத்தத்தின் பிடியில் எல்லீஸ் சாலை முனை: மாநகராட்சி, உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மெத்தனம்

செய்திப்பிரிவு

சென்னை

சென்னை எல்லீஸ் சாலை முனை, வரிசைகட்டி நிற்கும் குப்பைத் தொட்டி களாலும், சுகாதாரமற்ற சாலையோர உணவகங்களாலும் அசுத்தத்தின் பிடியில் சிக்கியுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

புகைப்படக் கருவிகள் மற்றும் போட்டோ ஸ்டுடியோக்களுக்கு தேவை யான பொருட்கள் விற்பனை, போட்டோ ஆல்பங்கள் தயாரிப்பு, டிஜிட்டல் போர் டுகள், மின் விளக்குகள் பொருத்தப்பட்ட போர்டுகள் தயாரிப்புக்கு பிரசித்தி பெற்றது சென்னை எல்லீஸ் சாலை.

இந்தச் சாலைக்கு தினமும் பல்லா யிரக் கணக்கானோர் வந்து செல்கின் றனர். அதனால் இந்தச் சாலை எப் போதும் மக்கள் நெருக்கம் மிகுந்த சாலையாக உள்ளது. ஆனால், அண்ணா சிலை அருகில் உள்ள எல்லீஸ் சாலை முனை குப்பைத் தொட்டி களாலும், சுகாதாரமற்ற சாலையோர உணவகங்களாலும் அசுத்தத்தின் பிடியில் சிக்கியுள்ளது.

எல்லீஸ் சாலையின் குறுக்குத் தெருக்களில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் முழுவதும் எல்லீஸ் சாலை முனையில் வரிசையாக வைக்கப் பட்டுள்ள 8 குப்பைத் தொட்டிகளில் கொட்டப்படுகிறது. அதிலிருந்து கசியும் திரவம் சாலையில் படிந்து கடும் துர்நாற்றத்தை ஏற்படுத்துவதாக அவ்வழியாகச் செல்வோர் புகார் தெரிவித்து வருகின்றனர்.

சாலையோரக் கடைகளில் உணவைத் தயாரிக்கக் கூடாது. வேறு இடத்தில் தயாரிக்கப்பட்டு பொட்டல மாக மட்டுமே விற்க வேண்டும் என்று தெருவோரக் கடைகளை முறைப்படுத் துவதற்கான விதிகளை சென்னை மாநகராட்சி உருவாக்கியுள்ளது. ஆனால் இந்த எல்லீஸ் சாலை முனையில் உள்ள சாலையோர உணவகங்கள், அங்கேயே சமைத்து, அங்கேயே பாத்திரங்களை கழுவி, அந்தக் கழிவுநீரை அருகில் உள்ள மழைநீர் வடிகாலில் விதிகளை மீறி ஊற்றி வருகின்றனர். இதனால் அந்த மழைநீர் வடிகாலில் இருந்து கடும் துர்நாற்றம் வெளியேறி வருகிறது.

இந்தச் சாலை முனையில் இயங்கி வரும் சாலையோர உணவகங்களில் அறவே சுகாதாரம் இல்லை. அசைவ உணவுகள் பலநாட்கள் விற்பனை ஆகாமல் அப்படியே கிடக்கின்றன. அதை வெளியூர்களில் இருந்து வரும் ஏழை மக்கள் உண்டு, பல்வேறு உடல் உபாதைகளுக்கு உள்ளாகின்றனர். அங்கு பயன்படுத்தப்படும் எண்ணெயும் சுகாதாரமானதாக இல்லை.

எல்லீஸ் சாலை முனையில் நிலவும் சுகாதாரற்ற நிலையை சரிசெய்ய மாநகராட்சியும், உணவு பாதுகாப்புத் துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

எல்லீஸ் சாலையில் வேறு எங்கும் குப்பைத் தொட்டிகளை வைக்க இடம் இல்லை. சுகாதாரக் கேடு ஏற்படுவதைத் தடுக்க அங்கு நாளொன் றுக்கு 3 முறை குப்பைகள் அகற்றப்படு கின்றன. அந்த இடத்தில் பிளீச்சிங் பவுடர் தூவப்படுகிறது. நீர் கசிந்து அசுத்தமாவதைத் தடுக்க, அங்குள்ள சாலையோர உணவகங்களில் இருந்து மிச்சமாகும் உணவுகளை, உரம் தயாரிக்க நாங்களே வாங்கிச் செல்கி றோம். அங்குள்ள தொட்டிகளின் எண் ணிக்கையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அங்கு மழைநீர் வடி காலில் கழிவுநீர் ஊற்றுவதும் தடுக்கப் படும். இவ்வாறு மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.

இதுகுறித்து பொதுமக்கள் சிலர் கூறியதாவது: ‘‘அந்தந்த கடைகளில் சேரும் குப்பைகளை கடை உரிமையா ளர்களே சேகரித்து வைக்கவும், குறுக லான சந்துகளிலும் செல்லும் மூன்று சக்கர சைக்கிள்களை அடிக்கடி அனுப்பி, குப்பைகளை அங்கிருந்து வெளியேற்றவும் நடவடிக்கை எடுக்க லாம். அதிகாரிகள் முறையாக திட்டமிட் டால் சுகாதாரக் கேடு மற்றும் போக்கு வரத்து நெரிசல் ஏற்படாத வகையில் குப்பைகளை அப்புறப்படுத்த முடியும்.

மாறாக, வேறு இடங்களில் குப்பைத் தொட்டிகள் வைக்க இடம் இல்லை என்பதற்காக ஒரே இடத்தில் ஏராளமான குப்பைத் தொட்டிகளை வைத்து குப்பைகளைக் குவிப்பது எவ்விதத்திலும் சரியல்ல" என்றனர்.

எல்லீஸ் சாலைப் பகுதியில் செயல்படும் சுகாதாரமற்ற உணவகங் கள் பற்றி உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “அப்பகுதியில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தனர்.

வாலாஜா சாலையில் உள்ள ஏராள |மான கடைகளில் உருவாகும் குப்பை களும், எல்லீஸ் சாலை முனையில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டி களில்தான் கொட்டப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT