தமிழகம்

வேகம் எடுக்காத பெரியாறு குடிநீர் திட்டம்: உள்ளாட்சித் துறை அமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா?

செய்திப்பிரிவு

ஒய். ஆண்டனி செல்வராஜ்

மதுரை

மதுரை மாநகராட்சியின் மக்கள் தொகை 20 லட்சத்தை நெருங்கி விட்டதால் குடிநீர் மற்றும் அன்றாட உபயோகத்துக்கு பயன்படுத்தும் நீரின் தேவை அதிகரித்துவிட்டது. ஆனால், மதுரைக்கு மிகப்பெரிய கூட்டுக்குடிநீர் திட்டம் எதுவும் இல்லை.

வைகை அணையில் போதுமான அளவு தண்ணீர் இருந்தால் மட் டுமே, மாநகராட்சியால் ஒரு நாள் விட்டு ஒருநாள் குடிநீர் விநியோகம் செய்ய முடியும். மற்ற காலங்களில் 4 நாட்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் விநியோகம் நடக்கிறது. அதுவும், பழைய மாநகராட்சியின் 72 வார்டுகளில் 32 வார்டுகளில் உள்ள குடிநீர் விநியோகக் குழாய்கள் 1924-ம் ஆண்டு அமைக்கப்பட்டவை. மீதி 40 வார்டுகளில் உள்ள குடிநீர் குழாய்கள் எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டவை.

அந்தக் குழாய்களில் பழுது ஏற்பட்டுள்ளதால் அதிக அழுத் தத்தில் (ப்ரஷர்) மாநகராட்சியால் குடிநீர் விநியோகம் செய்ய முடிய வில்லை. அதனால், மதுரையில் பெரும்பாலான குழாய்களில் குடிநீர் வருவதில்லை. மக்கள், அடிபம்பு வைத்து அடித்து குடி நீரை எடுக்கின்றனர்.

முதியோர், கர்ப்பிணிகள், உடல் ஆரோக்கியமில்லாத பெண் களால் அடிபம்புகளை வைத்து குடிநீரை எடுக்க முடியவில்லை.

வசதி படைத்தவர்கள், மின் மோட்டார்களை வைத்து குடிநீரை உறிஞ்சுகின்றனர். அடித்தட்டு மக்களுக்கு குடிநீர் சென்றடை யவில்லை.

குடிநீரை முழுமையாக விநி யோகம் செய்ய முடியாததால், மாநகராட்சியும் மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சுவோர் மீது தீவிர நடவடிக்கை எடுக்க முடியவில்லை.

மாநகராட்சியுடன் இணைக் கப்பட்ட வார்டுகளுக்கு காவிரி குடிநீர் விநியோகம் செய்யப் படுகி றது. ஆனால், போதுமான குடிநீர் கிடைப்பதில்லை. அதனால், லாரிகளைக் கொண்டு மாநகராட்சி குடிநீர் விநியோகிக்கிறது. ஆனால், குடிநீர் லாரிகள் வரும் நேரம் பொதுமக்களுக்கு தெரிவதில்லை. அதனால், மக்கள் குடிநீரை ஒரு குடம் ரூ.10 கொடுத்து வாங்கும் அவலம் தொடர்கிறது.

ஒரு காலத்தில் செழிப்புக்கு பெயர் பெற்ற மதுரை மாவட் டத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிரந்தரமாகிவிட்டதால் தொழில் முதலீடுகள் வராமல் வேலை வாய்ப்பு குறைந்து, வளர்ச்சியில் பின்தங்கியுள்ளது.

மதுரையின் குடிநீர் தேவையை நிறைவேற்ற முதல்வர் கே.பழனி சாமி 2017-ம் ஆண்டு ரூ.1020 கோ டியில் பெரியாறு குடிநீர் திட்டத்தை அறிவித்தார். இத்திட்டம் அறிவித்து 2 ஆண்டுகளைக் கடந்துவிட்டது. இன்னும் டெண்டர் நிலையில்தான் உள்ளது. மூன்று கட்டமாக முடிக்க உள்ள இத்திட்டத்தின் பகுதி-2 திட்டப்பணிகளுக்கு மட்டுமே டெண்டர் விடப்பட்டுள்ளது. பகுதி-1 டெண்டர் அறிவிப்பு வெளியி டப்பட்டு ரத்து செய்யப்பட்டது.

தற்போது பகுதி-1, பகுதி-3 டெண்டர் விட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்படி இந்தத் திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள், தாமதம் ஏற்பட்டு வருகிறது. அதனால், இந்தத் திட்டத்தின் மதிப்பீடு அதிகரிக்க வாய்ப்புள்ளதால் மாநகராட்சிக்கு மிகப்பெரிய சுமை ஏற்படும்.

இந்நிலையில், மதுரை உட்பட 5 மாவட்டங்களின் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு நடத்த உள்ளாட்சித்துறை அமைச் சர் எஸ்.பி.வேலுமணி இன்று மதுரை வருகிறார்.

நகரில் விஸ்வரூபம் எடுத்துள்ள குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க பெரியாறு குடிநீர்த் திட்டத்துக்கு அமைச்சர் வேலுமணி முக்கிய த்துவம் கொடுத்து அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டு உடன டியாக திட்டத்தைத் தொடங்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

SCROLL FOR NEXT