அ.வேலுச்சாமி
திருச்சி
திருச்சியில் இருந்து கொச்சி, பெங் களூரு விமான சேவைகளுக்கான முன்பதிவு அக்.27-ம் தேதி முதல் நிறுத்தப்பட்டுள்ளதால், அந்த சேவைகள் நிறுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, துபாய், சார்ஜா உள்ளிட்ட நாடுகளுக்கு நாள் தோறும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. உள்நாட்டு விமானசே வையை பொறுத்தவரை, இங்கி ருந்து சென்னை, திருவனந்தபுரம், கோழிக்கோடு, மும்பை, பெங்க ளூரு ஆகிய நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டன. காலப்போக்கில் பல்வேறு கார ணங்களால் சென்னை தவிர மற்ற வழித்தடங்களுக்கான சேவைகள் நிறுத்தப்பட்டன. இதனால் விமான நிலைய வளர்ச்சி பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, விமானநிலைய நிர்வாகம் மற்றும் பல்வேறு அமைப் புகளின் தொடர் நடவடிக்கைகளால், கடந்த ஆண்டு திருச்சியில் இருந்து மும்பை, டெல்லிக்கு ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் உள்நாட்டு விமான சேவையைத் தொடங்கியது. இதற்கு பயணிகளிடம் வரவேற்பு கிடைத்ததால், திருச்சியில் இருந்து சென்னை, பெங்களூரு, கொச்சி ஆகிய நகரங்களுக்கு இன்டிகோ நிறுவனம் விமான சேவையைத் தொடங்கியது. இதனால் 2017-18-ம் ஆண்டில் 1,37,019 ஆக இருந்த உள்நாட்டு பயணிகளின் எண் ணிக்கை, ஒரே ஆண்டில் (2018-19) 3,28,058 ஆக அதிகரித்தது.
இந்த சூழலில், நிர்வாக காரணங்களால் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது விமான போக்கு வரத்து சேவைகளை முற்றிலு மாக நிறுத்தியது. இதனால் திருச்சியில் இருந்து மும்பை, டெல்லி வழித்தடத்தில் இயக்கப்பட்ட விமானங்களும் நிறுத்தப்பட்டன.
இந்நிலையில், அக்.27-ம் தேதி முதல் திருச்சியில் இருந்து கொச்சி, பெங்களூருவுக்கான விமான சேவையை இன்டிகோ நிறுவனம் நிறுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில் அந்நிறுவனத்தின் இணையதளத் தில் அக்.26-ம் தேதிக்கு பிறகு திருச்சியில் இருந்து பெங்களூரு, கொச்சிக்கான முன்பதிவு நிறுத்தப் பட்டுள்ளது.
இதுகுறித்து திருச்சி மாநகர் வளர்ச்சி ஆர்வலர்கள் குழு (டைட்ஸ்) உறுப்பினரான எச்.உபய துல்லா கூறும்போது, ‘‘ஏற்கெனவே மும்பை, டெல்லிக்கு விமான சேவை நிறுத்தப்பட்டதால் பயணி கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். தற்போது, பெங்களூரு, கொச்சிக்கான சேவை களும் நிறுத்தப்படுவது வேதனைய ளிக்கிறது. திருச்சியில் இருந்து பெங்களூருவுக்கு நேரடி ரயில் வசதி இல்லாத சூழலில், தற்போது விமான சேவையும் நிறுத்தப் பட்டால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்படுவர். மேலும், பயணி கள் சேவை மற்றும் மேம்பாட்டுக் கட்டணம் மூலம் விமானநிலைய நிர்வாகத்துக்கு நாளொன்றுக்கு கிடைக்கக்கூடிய ரூ.50 ஆயிரம் வருவாயும் பறிபோகும்.
திருச்சியில் இருந்து லாபத்தில் இயங்கிக் கொண்டிருந்த விமான சேவைகள் திடீரென நிறுத்தப் படுவதன் பின்னணி புரியவில்லை. இதுகுறித்து திருச்சி, கரூர், தஞ்சாவூர், பெரம்பலூர், சிதம்பரம், நாமக்கல் தொகுதிகளின் எம்.பி.க்களும், திருச்சி விமானநிலைய இயக்குநரும் சம்பந்தப்பட்ட விமான நிறுவனம் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் முறையிட்டு, அனைத்து வழித் தடங்களில் இருந்தும் மீண்டும் திருச்சிக்கு விமான சேவை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
இதுகுறித்து விமானநிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘கொச்சி, பெங்களூரு விமான சேவைகள் ரத்து செய்யப்படுவது குறித்து அந்நிறுவனத்திடமிருந்து முறைப்படி இதுவரை அறிவிப்பு வரவில்லை. இது ஒரு தற்காலிக நடவடிக்கையாகக்கூட இருக்கலாம். எனவே, இதுகுறித்து அந்நிறுவனத் துடன் பேசி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.
இன்டிகோ விமான நிறுவன அதிகாரிகளிடம் கேட்டபோது, தலைமை அலுவலகத்தில் இருந்து முறைப்படி தகவல் வந்தால் மட்டுமே தெரிவிக்க முடியும் எனக் கூறிவிட்டனர்.
கொச்சி, பெங்களூருவுக்கான விமான சேவைகள் நிறுத்தப்படும் பட்சத்தில், அதன்பின் திருச்சி யிலிருந்து சென்னைக்கு மட்டுமே உள்நாட்டு விமான சேவை இருக்கும். இதன்காரணமாக திருச்சி விமானநிலையத்தின் உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கையும் கணிசமாக குறையும் நிலை உருவாகியுள்ளது.