வேலூர்
ஆட்சியின்போது தவறு மற்றும் ஊழல் செய்தவர்கள் பிரதமர் மோடியிடம் இருந்து தப்பிக்க முடியாது என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
வேலூரில் நேற்று நடைபெற்ற பாஜக உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது: காஷ்மீரில் 370 சட்டப் பிரிவை ரத்து செய்ததற்கு ஆதரவு தெரிவித்து 23 நாட்களுக்குப் பிறகு ராகுல்காந்தி தற்போது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். அதில், காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி. அதை பாகிஸ்தான் சொந்தம் கொண்டாட முடியாது என அவர் கூறியுள்ளார். காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் அதிபர் களும் முழு ஆதரவு தெரிவித்துள் ளனர். காஷ்மீரை தொடர்ந்து பாகிஸ் தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பதுதான் அடுத்த இலக்கு.
முதல்வர் பழனிசாமி 10 நாள் பயணமாக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளது வரவேற்கத்தக்கது. தமிழகத்துக்கு தொழில் முதலீடு களை கொண்டு வர முதல்வர் பழனிசாமி சென்றுள்ளார். தமிழக வளர்ச்சிக்கு பாஜக முழு ஒத்துழைப்பு கொடுக்கும்.
நாட்டின் பொருளாதார வளர்ச் சியை சீர் செய்ய அனைத்து முயற்சி களும் எடுக்கப்பட்டு வருகின்றன. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ரிசர்வ் வங்கியில் இருந்து 4 முறைக்கு மேல் பணத்தை பெற்றுள் ளனர். பொருளாதார மேதை எனக் கூறப்படும் ப.சிதம்பரத்தால் நாட்டின் வளர்ச்சிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியவில்லை. தமிழகத்துக்கு பாரமாக இருந்த சிதம்பரம் தற்போது சிபிஐ விசாரணையில் உள்ளார். ஆட்சியின்போது தவறு செய்தவர் கள், ஊழல் செய்தவர்கள் பிரதமர் மோடியிடம் இருந்து தப்பிக்க முடியாது.
செங்கல்பட்டில் செயல்பட்டு வரும் தடுப்பூசி தயாரிக்கும் எச்எல்எல் நிறுவனம் மூடப்படாது என மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் அஸ்வினிகுமார் தெரிவித்துள்ளார் என்றார்.