சென்னை அண்ணாசாலையில் நேற்று இரவு பெய்த மழையில் நனைந்தபடி சென்ற வாகனங்கள்.படம்: க.ஸ்ரீபரத் 
தமிழகம்

இடி, மின்னலுடன் பரவலாக மழை: வெப்பம் தணிந்து சென்னை குளிர்ந்தது

செய்திப்பிரிவு

சென்னை

சென்னை மற்றும் புறநகர் பகுதி களில் நேற்று மாலை பெய்த திடீர் மழையால் மாநகரம் முழுவதும் வெப்பம் தணிந்து பூமி குளிர்ந்தது.

சென்னை மற்றும் புறநகர் பகுதி களில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மழை பெய்யவில்லை. கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. இந்நிலையில் நேற்று மாலை சுமார் 6.30 மணி அளவில் சென்னை மற்றும் புற நகர் பகுதிகளில் திடீரென மழை பெய்யத் தொடங்கியது.

சேப்பாக்கம், திருவல்லிக் கேணி, மயிலாப்பூர், அடையாறு, ராயப்பேட்டை, எழும்பூர், சைதாப் பேட்டை, கிண்டி, கோயம்பேடு, வட பழனி, அண்ணா நகர், கீழ்ப்பாக் கம், புரசைவாக்கம், வியாசர்பாடி, பெரம்பூர், மாதவரம், தண்டையார் பேட்டை, திருவொற்றியூர், மீனம் பாக்கம், தாம்பரம், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின் னலுடன் பரவலாக மழை பெய் தது. சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் நீடித்த மழையால் அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் பல்வேறு உட்புற சாலை களில் மழைநீர் தேங்கியது. இத னால் வாகன ஓட்டிகள் சிரமத்துக் குள்ளாயினர்.

மாலையில் பெய்த திடீர் மழையால் பணிகள் முடிந்து வீடுகளுக்கு செல்ல முடியாமல் பணியாளர்கள் பலருக்கு சிரமம் ஏற்பட்டது.

கடந்த சில தினங்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதி களில் கடும் வெப்பம் வாட்டி வந்த நிலையில், நேற்று பெய்த திடீர் மழையால் சென்னை குளிர்ந்து, ரம்மியமான சூழல் நிலவிய தால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

SCROLL FOR NEXT