சேலம்
கதாசிரியராக இருந்ததை பெருமையாக கருதியவர் கருணாநிதி என தாரமங் கலத்தில் கருணாநிதியின் சிலையை திறந்து வைத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சேலம் தாரமங்கலத்தில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் முழு உருவச்சிலை திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு, மேற்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்ஆர் சிவலிங்கம் தலைமை வகித்தார். தலைமை செயற் குழு உறுப்பினர் அம்மாசி வரவேற்றார். முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், எம்பி-க்கள் பார்த்திபன் (சேலம்), செந்தில்குமார் (தருமபுரி), மாநகர் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கருணாநிதியின் சிலையை திறந்துவைத்து, திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:
தமிழகத்தில் 5 முறை முதல் வராகவும், பல பிரதமர் களையும், ஜனாதிபதியையும் உருவாக்கிய திமுக தலைவர் கருணாநிதி, கதாசிரியராக இருந்ததையே பெருமையாக கருதினார். சேலத்தில் கதாசிரியராக பணிபுரிந்த கருணாநிதிக்கு, இங்கு சிலை வைத்துள்ளது பொருத்தமானது.
திமுக-வில் படிபடியாக பல பொறுப்புகளை பெற்று, தலைவர் பதவிக்கு நான் வந்துள்ளேன். இங்கிருந்து தமிழக முதல்வருக்கு சவால் விடுக்கிறேன். சேலம் தவிர்த்து, பிற மாவட்டங்களில் ஏதாவது ஒரு கிராமத்துக்கு தனி ஆளாக இருவரும் சென்றால், யாரை மக்களுக்கு தெரிகிறது என்று பார்ப்போம்.
அதிமுக ஆட்சியில் மாவட்டத்தை பிரிப்பதை தவிர வேறு எந்த சாதனையும் செய்யவில்லை. கடந்த எட்டு ஆண்டாக சட்டப்பேரவையில் 110- விதியின் கீழ் பல ஆயிரம் கோடி திட்டப்பணிகள் அறிவிக்கப்பட்டு, ஏதாவது ஒன்று நிறைவேற்றப்பட்டது என்று முதல்வர் பழனிசாமி யால் கூற முடியுமா? அந்நிய முதலீட்டாளர் மாநாடு இரண்டு முறை நடத்தி ரூ. 7.42 லட்சம் கோடி முதலீடு திரட்டியதாக கூறுகின்றனர். அதற்கான கணக்கை சட்டப்பேரவையில் பல முறை கேட்டும் பதில் இல்லை.
சேலம் இரும்பாலை தொழி லாளர்களின் நிலையை அறிந்து, ஒரு அறிக்கை கூட விடாத முதல்வராக பழனி சாமி இருக்கிறார். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.