ஆழ்துளை கிணறுகளில் இருந்து நீர் எடுத்து விடப்படுவதால் நிரம்பி வரும் அனந்த சரஸ் குளம். 
தமிழகம்

ஆழ்துளை கிணறுகள் மூலம் அத்திவரதர் சயனிக்கும் குளத்தில் நீர் நிரப்பும் பணி: காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம் நடவடிக்கை

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் சயனிக்கும் அனந்தசரஸ் குளத்தை ஆழ்துளை கிணறுகளில் இருந்து நீரை எடுத்து நிரப்பும் பணியில் கோயில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் உள்ள அனந்த சரஸ் குளத்தில் கடந்த 40 ஆண்டுகளாக ஜல சயனத்தில் இருந்த அத்திவரதர் வெளியில் வந்து கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் ஆக. 17-ம் தேதி வரை பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான பக்தர்கள் அத்திவரதரை கண்டு வணங்கினர்.

இதைத் தொடர்ந்து நிறைவு பூஜைகள் செய்யப்பட்டு கடந்த ஆக. 17 இரவு அனந்த சரஸ் குளத்தில் உள்ள நடவாவியில் அத்திவரதர் மீண்டும் சயனக் கோலத்தில் வைக்கப்பட்டார். அத்தி வரதரை வெளியில் எடுக்கும் போதே இக்குளத்தில் இருந்த நீர் முழுவதும் அருகில் உள்ள பொற்றாமரைக் குளத்துக்கு மாற் றப்பட்டது. இதனால் அனந்த சரஸ் குளம் நீரின்றி இருந்து வந்த நிலையில், அத்திவரதரை மீண்டும் ஜல சயனத்தில் வைக்கப்பட்ட நாளில் குறைந்த அளவு மழை பெய் தது. இதனால் நடவாவி நிரம்பி குளத்தில் அரை அடி அளவுக்கு மட்டுமே தண்ணீர் இருந்தது.

தண்ணீர் குறைவாக இருப்ப தால் ஜல சயனத்தில் இருக்கும் அத்திவரதரை காணும் ஆர்வத்தில் சிலர், குளத்துக்குள் இறங்கலாம் என்பதால் அப்பகுதியில் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் பொற்றாமரை குளத்தில் உள்ள தண்ணீரை அனந்தசரஸ் குளத் துக்குள் மாற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அத்தி வரதர் ஜல சயனத்தில் உள்ள குளத்துக்குள் தூய்மையான நீரை பயன்படுத்த வேண்டும் என்று ஏற்கெனவே நீதிமன்றம் கூறியுள்ளதால், பொற்றாமரை குளத்து நீர் பயன்படுத்தப்பட வில்லை.

தற்போது ஆழ்துளைக் கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து கோயில் குளத்தை நிரப்பும் நடவடிக்கையில் கோயில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

இதுகுறித்து கோயில் செயல் அலுவலர் தியாகராஜனிடம் கேட்டபோது ஏற்கெனவே அனந்த சரஸ் குளத்தில் இருந்து பொற் றாமரை குளத்துக்கு மாற்றப்பட்ட நீரை மீண்டும் குளத்தை நிரப்பு வதற்கு நாங்கள் பயன்படுத்த வில்லை. மழைநீர் மற்றும் ஆழ்துளை கிணறு மூலம் எடுக்கப்படும் நீரைக் கொண்டே குளத்தை நிரப்ப நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றார்.

SCROLL FOR NEXT