மானாம்பதியில் வெடிகுண்டு தேடும் பணியில் ஈடுபட்ட போலீஸார். 
தமிழகம்

மானாம்பதி கோயில் குளக்கரையில் வெடிகுண்டு தேடும் பணி நிறைவு: கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டு செயலிழப்பு பணி தீவிரம்

செய்திப்பிரிவு

திருப்போரூர்

மானாம்பதி கங்கையம்மன் கோயில் அருகே வெடிகுண்டு தேடும் பணிகளை போலீஸார் நேற்று நிறைவு செய்த நிலையில், சம்பவ இடத்தில் கண்டுபிடிக் கப்பட்ட வெடிகுண்டை ஏடிஜிபியி டம் ஒப்படைத்து செயலிழக்கச் செய்ய செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், திருப் போரூர் அடுத்த மானாம்பதி கிரா மத்தை சேர்ந்தவர் திலிபன்ராக வன்(25). நண்பர்களுடன் குளக் கரையில் பிறந்தநாளை கொண்டா டியபோது, அங்கு கிடைத்த மர்மப் பொருளை உடைக்க முயன்ற போது பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில், பலத்த காயமடைந்த திலிபன்ராக வன், சூர்யா ஆகிய இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையடுத்து, சம்பவ இடத் தில் வெடிகுண்டு நிபுணர்கள் நேற்று முன்தினம் சோதனையில் ஈடுபட்டபோது வெடிகுண்டின் வெடித்து சிதறிய பாகங்களை கைப்பற்றினர்.

மேலும் ராக்கெட் லாஞ்சரில் பயன்படுத்தக் கூடிய மேலும் ஒரு வெடிகுண்டை கைப் பற்றினர். சென்னையை சேர்ந்த வெடிகுண்டு நிபுணர்கள், அப்பகுதி யில் தொடர்ந்து சோதனை செய் தனர். 2 நாட்களாக சோதனை மேற் கொண்ட நிலையில், வேறு வெடி குண்டுகள் கைப்பற்றப்படாததால் தேடும் பணிகளை போலீஸார் நேற்று பிற்பகலில் நிறுத்தினர்.

பின்னர், சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட வெடிகுண்டை அதே பகுதியில் உள்ள ஏரியில் 4 அடி ஆழத்தில் வைத்து, மணல் மூட்டைகளை அடுக்கி பாதுகாப் பாக வெடிக்க வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன.

எனினும், உரிய அனுமதி கிடைக் காததால் வெடிகுண்டு நிபுணர்கள் கைப்பற்றப்பட்ட வெடிகுண்டை வெடிக்கவைப்பதற்கான பணி களை கடைசி நேரத்தில் ரத்து செய்து, வெடிகுண்டை பாதுகாப் பாக செங்கல்பட்டு மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் 2-ல் நீதிபதி காயத்ரிதேவி முன்னிலையில் சமர்ப்பித்தனர். இதையடுத்து, ஏடிஜிபி ஆபரேஷன்ஸ் மகேஷ் குமார் அகர்வாலிடம் ஒப்படைத்து, வெடிகுண்டை செயலிழக்கச் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

தொடர் விசாரணை

இதனிடையே, சம்பவ இடத்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வாடகை வீட்டில் தங்கி, பழைய இரும்பு பொருட்களை வாங்கும் தொழில் செய்து வந்த கடப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த முகம்மது ரபிஃக்(34) என்பவரை, தனிப்படை போலீஸார் நேற்று பிடித்தனர். மேலும், அவரிடம் வெடிகுண்டுகள் குறித்து போலீ ஸார் தொடர் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT