சென்னை
டாஸ்மாக் கடைகளில் 6 மாதங் களுக்குள் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 5,000-க் கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், 3,000 டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமரா பொருத்த முடிவு செய்யப் பட்டது. இதற்காக, இரண்டு முறை டெண்டர் விடப்பட்டன. இருப்பினும், ஒப்பந்த புள்ளிகள் இறுதி செய்யப்படாததால் பணிகள் கைவிடப்பட்டன.
இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளியை அடுத்த பேட்டப்பனூரில் கடை யில் இருந்த டாஸ்மாக் பணி யாளரை அண்மையில் கொலை செய்து, மர்ம நபர்கள் ரூ.1.50 லட்சம் கொள்ளையடித்துச் சென்றனர்.
இதைத்தொடர்ந்து, ஊழி யர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த அடுத்த 6 மாதத்துக்குள் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் ஆர்.கிர்லோஷ்குமார் உத்தர விட்டுள்ளார்.
நேரடி கண்காணிப்பு
இதுதொடர்பாக, டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
டாஸ்மாக் கடைகளில் பொருத்தப்படும் கேமராக்கள் தலைமை அலுவலகத்தில் இருந்து நேரடியாக கண் காணிக்கப்படும். இவற்றின் மூலம் ஊழியர்களின் நடவடிக் கைகள், 18 வயதுக்கு கீழ் உள்ள வர்களுக்கு மது விற்பனை செய்யப்படுகிறதா, பணியாளர் கள் நிர்ணயிக்கப்பட்ட விலை யைவிட அதிக விலைக்கு மது விற்பனையில் ஈடுபடுகிறார் களா என்பன உள்ளிட்டவை கண்காணிக்கப்படும். கேமரா பொருத்தும் பணிகளை 6 மாதத்துக்குள் முடிக்க வேண் டும் என்று உத்தரவிடப்பட் டுள்ளது.
எனவே, டெண்டரை இறுதி செய்து ஒரு சில வாரங்களில் கேமரா பொருத்தும் பணிகளைத் தொடங்க முடிவு செய்துள் ளோம். இதற்கான பணிகளில் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம் என்றார்.