கீழடி அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட வடிகால் சுவர். 
தமிழகம்

கீழடி அகழாய்வில் வடிகால் சுவர் கண்டுபிடிப்பு

செய்திப்பிரிவு

திருப்புவனம்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வில் மழை நீர் வடிகால் சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது தொல் பொருள் ஆர்வலர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வு ஜூன் 13-ம் தேதி நடைபெறுகிறது. இதுவரை 5 பேரின் நிலங்களில் 30 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இதில் மணிகள், அணிகலன்கள், பானை ஓடுகள், குறியீடு ஓடுகள், உறை கிணறுகள், இரும்புப் பொருட்கள், செப்புக் காசுகள், உணவுக் குவளை, தண்ணீர் ஜக் உட்பட 700-க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன. மேலும் அதிக அளவில் சுவர் களும் கிடைத்தன.

முருகேசன் என்பவரது நிலத் தில் செங்கற்களால் கட்டப்பட்ட குளியல் தொட்டி நேற்று முன் தினம் கிடைத்தது. நீதி என்பவரது நிலத்தில் வடிகால் சுவர் நேற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே மழை நீர் செல்ல தமிழர்கள் வடிகால் வசதி செய்திருப்பது தெரியவந்துள்ளதாக தொல் பொருள் ஆர்வலர்கள் தெரிவித் தனர்.

SCROLL FOR NEXT