சென்னை
முதல்வர் பழனிசாமி அரசு முறை பயணமாக நாளை லண்டன் செல் கிறார். இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு முதலீட் டாளர்களை சந்திக்கிறார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வெளிநாடு வாழ் தமிழர்கள், பிற முதலீட்டாளர்களிடம் இருந்து முதலீடுகளை தமிழகத்துக்கு ஈர்ப் பதற்காக இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடு களுக்கு முதல்வர் பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக, சென்னையில் இருந்து நாளை (ஆக.28) காலை புறப் பட்டு லண்டன் சென்றடைகிறார். அங்கு சர்வதேச மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தினரை சந்தித்து புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளும் நிகழ்வில் பங்கேற்கிறார். இந்துஜா உள் ளிட்ட பல தொழில் முதலீட்டாளர் களையும் சந்திக்கிறார்.
லண்டன் பயணத்தை முடித்துக் கொண்டு செப். 2-ம் தேதி நியூயார்க் செல்லும் முதல்வர், அங்கு அமெரிக்க வாழ் தமிழ் தொழில் முனைவோர் கூட்டமைப்பின் பிரதி நிதிகள், அமெரிக்க தொழில் முனை வோர் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடுகிறார்.
அமெரிக்காவில் இருந்து செப்.7-ம் தேதி புறப்பட்டு துபாய் செல்லும் முதல்வர், செப். 8, 9 ஆகிய இரு தினங்களும் அங்கு நடக்கும் தொழில் முனைவோர் ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுவிட்டு, 10-ம் தேதி தமிழகம் திரும்பு கிறார்.
இவ்வாறு அந்த அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.