பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்காக முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்த அம்மா ரோந்து வாகனம்.படம்: ம.பிரபு 
தமிழகம்

பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்புக்காக சென்னையில் ‘அம்மா ரோந்து வாகனங்கள்’ அறிமுகம்: முதல்வர் பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

செய்திப்பிரிவு

சென்னை

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்கென அம்மா ரோந்து வாகன சேவையை முதல்வர் பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பொது இடங்களில் பெண்கள் பாதுகாப்பு திட்டத்துக்காக மத்திய அரசு சென்னை, மும்பை, கொல் கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், அகமதாபாத், டெல்லி மற்றும் லக்னோ ஆகிய 8 நகரங் களை தேர்வு செய்துள்ளது. இத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளின் பங்களிப் புடன் சென்னை பெருநகரத்துக்கு 425 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய் யப்பட்டுள்ளது.

அதில் முதல்கட்டமாக சென் னையில் பெண்கள் மற்றும் குழந் தைகளின் பாதுகாப்புக்காக ரூ.7 கோடியே 50 லட்சம் மதிப் பில் 40 ரோந்து வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. இதற்கு ‘அம்மா ரோந்து வாகனம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த வாக னங்களின் சேவையை தலை மைச்செயலகத்தில் முதல்வர் பழனிசாமி நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

குற்றச் செயல்களை தடுக்க...

சென்னை பெருநகர காவல் துறையின்கீழ் செயல்படும் 35 அனைத்து மகளிர் காவல் நிலை யங்களின் ரோந்து பயன்பாட்டுக் காக இந்த அம்மா ரோந்து வாகனங்கள் பயன்படுத்தப்படும். பிங்க் நிறம் கொண்ட இந்த வாகனங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களை தடுக்கவும் அவர்களுக்கு தேவையான பாது காப்பை உறுதி செய்யவும் நகரின் முக்கிய இடங்களில் ரோந்துப் பணிகளில் ஈடுபடுத்தப்படும். இதன்மூலம், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்கு தனிக்கவனம் செலுத்தப்படும்.

மேலும், சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையி னருக்கு, போக்குவரத்து விதிமீறு பவர்கள் மீது வழக்குகள் பதிந்து நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் ரூ.98 லட்சம் செலவில் 201 உடல் இணை நிழற்படக் கருவிகளையும் முதல்வர் நேற்று வழங்கினார். இந்தக் கருவிகளில் உள்ள கேமராக்கள் மூலமாக ஒலி மற்றும் ஒளி பதிவுகள், புகைப்படங்கள் ஆகியவற்றை பதிவு செய்யலாம்.

இப்பதிவுகளில் நிகழ்நேர தேதி, நேரம் மற்றும் இடம் ஆகி யவை தானாகவே பதிவாகும். மேலும், கேமராக்களின் நிழற்பட பதிவுகளை, காவல் துறை கட்டுப்பாட்டு அறையில் நேரலை யில் கண்காணிக்கலாம். அத்துடன், போக்குவரத்து அதிகாரிகள் எங்கு வழக்கு பதிவு செய்கிறார்கள் என்பதையும் நேரலையில் கண் காணிக்கலாம். இதன்மூலம், போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள் போக்குவரத்து விதி மீறல்களுக்கு வழக்குகள் பதிவு செய்வதில் வெளிப்படை தன்மை யும், நம்பகத்தன்மையும் உறுதி செய்யப்படும்.

இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் க.சண்மு கம், கூடுதல் தலைமைச் செயலா ளர் டாக்டர் நிரஞ்சன் மார்டி, காவல்துறை தலைமை இயக்குநர் ஜே.கே.திரிபாதி, சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT