கீழவைப்பாறு கடற்கரையில் ஒதுங்கிய பைபர் படகு. 
தமிழகம்

கீழ வைப்பாறு கடற்கரையில் திடீரென கரை ஒதுங்கிய பைபர் படகால் பரபரப்பு

செய்திப்பிரிவு

கோவில்பட்டி

கீழவைப்பாறு கடற்கரையில் நேற்று திடீரென பைபர் படகு கரை ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக கிடைத்த தகவலின் படி அனைத்து மாவட்டங்களிலும் போலீஸார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். கடலோர காவல் துறையினரும் கடற்கரையோரம் மற்றும் கடற்பகுதிகளில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கீழ வைப்பாறு கடற்கரையில் நேற்று பகலில் ஒரு பைபர் படகு கரை ஒதுங்கியது. இதை பார்த்த மீனவர்கள் உடனடியாக வேம்பார் மரைன் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

மரைன் காவல் ஆய்வாளர் சைரஸ் தலைமையிலான போலீ ஸார் உடனடியாக கீழவைப் பாறு வந்து, அந்த பைபர் படகை சோதனையிட்டனர். விசாரணை யில், அந்த படகு தூத்துக்குடியை சேர்ந்த உப்பள உரிமையாளருக்கு சொந்தமானது என தெரியவந்தது. அவருக்கு வேப்பலோடை பகுதியில் உப்பளங்கள் உள்ளன. அங்கு, கட்டி வைக்கப்பட்டிருந்த பைபர் படகு காற்றின் வேகத்தில் கயிறு அறுந்து சுமார் 1 மைல் தூரம் வரை இழுத்து செல்லப்பட்டு, கீழவைப்பாறில் கரை ஒதுங்கியது தெரிய வந்தது. உடனடியாக உப்பள உரிமையாளருக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் படகுக்கான உரிய ஆவணங்களை போலீஸாரிடம் காண்பித்து, படகை மீட்டு சென்றார்.

அந்த போட்டோஷூட்டுக்கு என்ன காரணம்? ரம்யா பாண்டியன்

SCROLL FOR NEXT