வேதாரண்யத்தில் நேற்று நடைபெற்ற கலவரத்தின்போது, தீப்பிடித்து எரிந்த கார், தண்ணீர் ஊற்றி அணைக்கப்படுகிறது. 
தமிழகம்

வேதாரண்யத்தில் இருதரப்பினரிடையே மோதல்: காருக்கு தீ வைப்பு; 300-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிப்பு 

செய்திப்பிரிவு

நாகப்பட்டினம்

வேதாரண்யத்தில் இருதரப்பினரி டையே நேரிட்ட மோதலால் ஏற்பட்ட பதற்றத்தை தணிக்க 300-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யத் தைச் சேர்ந்தவர் பாண்டி. முக்குலத்து புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர். அதே பகுதியில் உள்ள ராமகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இவர்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில், நேற்று மாலை வேதாரண்யம் காவல் நிலை யம் அருகில் உள்ள தனது வீட்டின் அருகில் நடந்து சென்று கொண்டிருந்த ராஜேந்திரனின் காலில் பாண்டி அரிவாளால் வெட்டினார். இதையடுத்து, இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட கலவரத்தில், அப்பகுதியில் இருந்த அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டது. மேலும், காவல் நிலையம் அருகில் நிறுத்தப்பட்டிருந்த பாண்டியின் கார் அடித்து நொறுக்கப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்டது. காவல் நிலையம் மீதும் கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து, அந்தப் பகுதியில் இருந்த கடைகள் அடைக்கப்பட்டன.

வேதாரண்யம் காவல் சரகத்தில் டிஎஸ்பி மற்றும் போலீஸ் பணியிடங்கள் காலியாக உள்ளன. 2 காவலர்கள் மட்டுமே பணியில் உள்ளதால், அவர்களால் உடனடியாக கலவரத்தை அடக்க முடியவில்லை. தகவலறிந்த எஸ்.பி டி.கே.ராஜசேகரன் உத்தர வின் பேரில், 300-க்கும் மேற்பட்ட அதிரடி போலீஸார் குவிக்கப்பட்டு, கலவரம் அடக்கப்பட்டது.

காயமடைந்த ராமச்சந்திரன் நாகை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர், மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனும திக்கப்பட்டார்.

தொடர்ந்து, அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால், போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த போட்டோஷூட்டுக்கு என்ன காரணம்? ரம்யா பாண்டியன்

SCROLL FOR NEXT