வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னிட்டு ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள விசைப்படகுகள். 
தமிழகம்

மீன் எண்ணெய், மீன்பிடி உபகரணங்களுக்கு ஜிஎஸ்டியை ரத்து செய்ய மீனவர்கள் வலியுறுத்தல்: ராமேசுவரத்தில் திடீர் வேலைநிறுத்தம் 

செய்திப்பிரிவு

ராமேசுவரம்

மீன் எண்ணெய் மற்றும் மீன்பிடி உபகரணங்களுக்கு விதிக்கப்பட் டுள்ள ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் 13 இடங் களில் மீன் தூள், மீன் எண்ணெய் உற்பத்தித் தொழிற்சாலைகள் உள் ளன. இங்கு உற்பத்தி செய்யப் படும் மீன் தூள், மீன் எண்ணெய் களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரியை 1.7.2017-ம் தேதி முதல் கட்ட வேண்டும் என தொழிற்சாலை களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மத்திய அரசின் இந்த அறிவிப்பையும், மீன்பிடி உபகரணங்களுக்கான ஜி.எஸ்.டி. வரியையும் ரத்து செய்ய வேண் டும், இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட படகுகளை நாட்டுடமையாக்கக் கூடாது, மீனவர்களை விடுவிக்க வேண்டும், இலங்கை சிறையில் உள்ள மீனவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலி யுறுத்தி ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் நேற்று முதல் கால வரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கி உள்ள னர்.

இதனால் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ஆழமற்ற பகுதியில் நிறுத்தி வைக் கப்பட்டுள்ளன. இதே கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 29-ம் தேதி ராமேசுவரம் ரயில் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் எனவும் மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT