சிவகாசியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் கிஃப்ட் பாக்ஸ்களை அடுக்கி வைக்கும் தொழிலாளர்கள். 
தமிழகம்

தீபாவளி பண்டிகைக்காக சிவகாசியில் பட்டாசு கிஃப்ட் பாக்ஸ் தயாரிப்பு தீவிரம்

செய்திப்பிரிவு

இ.மணிகண்டன்

சிவகாசி

தீபாவளிப் பண்டிகைக்காக சிவகாசியில் பட்டாசு கிஃப்ட் பாக்ஸ் தயாரிப்பு தீவிரமடைந்துள்ளது.

நாடு முழுவதும் அக்.27-ம் தேதி தீபாவளிப் பண்டிகை கொண் டாடப்பட உள்ளது. இதையொட்டி வணிக நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக் கும், உறவினர்கள், நண்பர்களுக் கும் அன்பளிப்பாக பட்டாசு கிஃப்ட் பாக்ஸ்கள் வழங்குவது வழக்கம்.

இதற்காகத் தங்களுக்குத் தேவையான விலையில் ஒரே மாதிரி தரமான பட்டாசு கிஃப்ட் பாக்ஸ்களை மொத்த ஆர்டரின் பேரில் சிவகாசியில் வாங்கிச் செல் வார்கள்.

குழந்தைகளைக் கவரும் வகை யில் சிறிய அளவிலான வெடிகள், தீப்பெட்டி மத்தாப்பு, கம்பி மத் தாப்பு, பாம்பு மாத்திரை, தரைச் சக்கரம், பூச்சட்டி, கார்ட்டூன் வெடிகள், பென்சில் வெடி, கலர் மத்தாப்பு, சோல்சா வெடி, பொட்டு வெடி, ரோல்கேப், ராக்கெட் வெடி, சிறிய பேன்ஸி ரக வெடிகள் என 20-க்கும் மேற்பட்ட பட்டாசு வகைகளைக் கொண்ட கிஃப்ட் பாக்ஸ்கள் தயாரிக்கப்படுகின்றன.

மேலும் பெண்களைக் கவரும் விதமாக தரைச் சக்கரம், கலர் பூச்சட்டி, வான வெடிகள் அடங் கிய கிஃப்ட் பாக்ஸ்களும், இளைஞர் களைக் கவரும் விதமாக புல்லட் பாம் வெடி, ஆட்டோ பாம் வெடி, அணுகுண்டு வெடி, லட்சுமி வெடி, ராக்கெட் போன்ற வெடிகள் அடங் கிய கிஃப்ட் பாக்ஸ்களும் தற்போது தயாரிக்கும் பணி நடைபெறுகிறது. இவை குறைந்த பட்சம் ரூ.200 முதல் அதிக பட்சம் ரூ.2,500 வரை விற்பனை செய்யப்படும்.

சிவகாசியில் பல்வேறு நிறுவ னங்கள் ஆர்டர்கள் கொடுத்து வாங்கிச் செல்வதால் இந்த ஆண்டு பட்டாசு கிஃப்ட் பாக்ஸ் கள் தயாரிப்பு இப்போதே தீவிரமடைந்துள்ளது.

SCROLL FOR NEXT