காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் சென்னையில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
தமிழக சட்டப்பேரவைக்கு 2016-ல் நடக்கும் பொதுத் தேர்தலில் 30 தொகுதிகளில் காந்திய மக்கள் இயக்கம் தனித்துப் போட்டியிடும். முதல்கட்டமாக 18 தொகுதி களுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளோம்.
இரா.கதிரேசன் - நாகர் கோவில், மு.ஆகாஷ்தேவ் - குளச்சல், நா.ரங்கநாதன் - ஸ்ரீவைகுண்டம், சு.ஈஸ்வரன் - மதுரை மேற்கு, சி. உமாராணி - திண்டுக்கல், அ.அரு ளானந்த் - காரைக்குடி, சி.கருப்பையன் - துறையூர் (தனி), ச.லாரன்ஸ் - லால்குடி, டென்னில் கோவில் பிள்ளை - கோவை வடக்கு, அ.சு.கிருஷ்ணமூர்த்தி - திருப்பூர் வடக்கு, வள்ளி ரமேஷ் - குன்னூர், ந.சுப்பிரமணியன் - உதகமண்டலம், ப.பெரிய சாமி ஈரோடு வடக்கு, நா.ரகுபதி - தருமபுரி, வே.பாண்டிகுமார் - ஓசூர், மு.பாண்டு - செங்கம் (தனி), தர்ம.தினகரன் - காஞ்சிபுரம், முகமது உசேன் - சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி.
இந்த 18 பேரும் காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15-ம் தேதி அவரது சிலைக்கு முன்பாக ‘மதுவற்ற மாநிலம், ஊழலற்ற நிர்வாகம் அமைப்போம், பொது வாழ்வில் தூய்மையாக இருப் போம்’ என உறுதிமொழி ஏற்பர். ஜூலை 17-ம் தேதி திருப்பூரில் வேட்பாளர்கள் அறிமுக பொதுக்கூட்டம் நடைபெறும்
இவ்வாறு தமிழருவி மணியன் கூறினார்.