தூத்துக்குடி
`சாகர்மாலா திட்டத்தின்கீழ், தூத் துக்குடி வஉசி துறைமுகப் பகுதி யில் 702 ஏக்கரில் ஏற்றுமதி, இறக்கு மதி சார்ந்த தொழில் பூங்கா அமைக் கப்படவுள்ளது” என மத்திய கப்பல் துறை இணை அமைச்சர் (தனி பொறுப்பு) மன்சுக் எல்.மண்டா வியா தெரிவித்தார்.
தூத்துக்குடி வஉசி துறை முகத்தில் நேற்று நடைபெற்ற விழா வில் அவர் பங்கேற்று, ரூ.193.08 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற பணி களை தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி னார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து ஆண்டுதோறும் 2.5 மில்லி யன் சரக்கு பெட்டகங்கள் கொழும்பு பன்னாட்டு சரக்கு பரிமாற்ற மையம் வழியாகவே ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்படுகின்றன. இதனை தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து நேரடியாக கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக பெரிய கப்பல்கள் வரும் வகையில் துறை முகத்தை ஆழப்படுத்தும் பணி உள் ளிட்ட பல்வேறு பணிகள் மேற் கொள்ளப்படவுள்ளன.
தூத்துக்குடி துறைமுகப் பகுதி யில் சாகர்மாலா திட்டத்தின்கீழ் கடலோர வேலைவாய்ப்பு மையம் உருவாக்கப்படுகிறது. இதற்காக துறைமுகத்துக்கு சொந்தமான 702 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் ஆடை உற்பத்தி, வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு, எண்ணெய் சுத்தரிகரிப்பு ஆலை போன்ற ஏற்றுமதி, இறக்கு மதி சார்ந்த பல்வேறு தொழிற்சாலை கள் அமைக்கப்படவுள்ளன. இதற் கான மாஸ்டர் பிளான் தயாரிக்கப் பட்டுள்ளது. இதன்மூலம் ஏராள மான புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். துறைமுகத்துக்கு அதிக சரக்குகளும் கிடைக்கும்.
துறைமுகங்களை மேம்படுத்து வதற்காக மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட சாகர்மாலா திட்டத் தின்கீழ், 200 பணிகள் செய்ய திட்ட மிடப்பட்டுள்ள நிலையில், 123 பணிகள் தொடங்கப்பட்டு நடை பெற்று வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக துறைமுகத்தில் நடைபெறும் பல்வேறு திட்டப் பணி களை ‘ஓசன் பிரைவ்' என்ற இழு வைக் கப்பலில் சென்று அவர் பார்வையிட்டார். விழாவில், முன் னாள் மத்திய கப்பல் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ் ணன், வஉசி துறைமுக பொறுப் புக் கழகத் தலைவர் தா.கி.ராமச்சந்திரன் கலந்து கொண்டனர்.