சென்னை
கணக்கில் காட்டப்படாத சொத்து கள் எதுவும் தன்னிடம் இல்லை என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், காங்கிரஸ் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
பல்வேறு தொலைக்காட்சி விவாதங்களில், கணக்கில் காட் டப்படாத சொத்துகளை உலகம் முழுவதும் நான் வாங்கியிருப் பதாக எவ்வித ஆதாரங்களும் இன்றி பேசி வருகின்றனர். கணக் கில் காட்டப்படாத சொத்துகள் எதுவும் எனக்கு இல்லை. என்னிடம் உள்ள சொத்துகள் அனைத்தும் சட்டப்படி வாங்கப்பட்டவை.
நான் இரண்டு முறை தேர்தலில் போட்டியிட்டு இருக்கிறேன். இரு முறையும் எனது சொத்துக் கணக் குகளை தாக்கல் செய்துள்ளேன். அவை பொதுவெளியில் இருக் கின்றன. அப்படி கணக்கில் காட்டப் படாத சொத்துகள் இருந்தால் வருமானவரித் துறை என் மீது நடவடிக்கை எடுத்திருக்கும்.
எனவே, எனக்கு எதிராக ஆதார மற்ற குற்றச்சாட்டுகள் கூறுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.