தமிழகம்

சென்னையில் தனியார் நிறுவனங்கள் பதித்துள்ள கேபிள்கள் குறித்து 15 நாட்களுக்குள் அறிக்கை அளிக்க வேண்டும்: வார்டு பொறியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை

சென்னை மாநகரில் தனியார் நிறுவனங்கள் பதித்துள்ள கேபிள் கள் குறித்து 15 நாட்களுக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என்று வார்டு பொறியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நிறுவப் பட்டுள்ள தனியார் நிறுவனங்களின் தொலைக்காட்சி, தொலைபேசி, இணையதளம் போன்ற சேவை களை வழங்கும் கேபிள்கள் மற்றும் கண்ணாடி இழை வடங்கள் ஆகியவற்றை முறைப்படுத்துதல் மற்றும் அனுமதியின்றி அமைக் கப்பட்டுள்ள கேபிள்களை அகற்றுவது குறித்த ஆய்வுக் கூட்டம் மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் தலைமையில் நேற்று முன்தினம் ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது.

அதில் ஆணையர் கோ.பிரகாஷ் அறிவுறுத்தியதாவது:

மாநகராட்சியில் உள்ள அனைத்து தெருக்கள் மற்றும் சாலைகளில் நிலத்துக்கடியில் மற்றும் மேற்பகுதியில் செல்லும் கேபிள்கள் குறித்த விவரங்களை சேகரித்து, அவற்றின் மொத்த அளவை வார்டு வாரியாக சம்பந்தப்பட்ட பொறியாளர்கள் கணக்கிட்டு, 15 நாட்களுக்குள் அறிக்கை அளிக்க வேண்டும்.

சென்னையில் 26 நிறுவனங்கள் தொலைக்காட்சி கேபிள் மற்றும் கண்ணாடி இழை கேபிள் அமைக்க அரசு நிர்ணயித்த கட்டணத்தை செலுத்தி அனுமதி பெற்றுள்ளன. இவற்றில், அனுமதிக்கப்பட்ட நிறுவனங்கள், அனுமதி அளிக்கப்பட்ட நீளத்துக்கு மேல் கேபிள்கள் அமைத்திருப்பது கண்டறியப்பட்டால், அந்நிறுவனங் களுக்கு தட வாடகை செலுத்த உரிய அவகாசம் வழங்கப் படும். தவறும் பட்சத்தில் அனுமதிக் கப்பட்ட நீளத்துக்கு மேல் நிறுவப்பட்ட கேபிள்களை அகற்ற வேண்டும்.

உரிய அனுமதி பெறாமல் கேபிள்கள் அமைக்கப்பட்டிருந் தால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உரிய அனுமதி பெற்று தட வாடகையை செலுத்த வேண்டும். செலுத்தத் தவறினால், அனைத்து கேபிள்களையும் அகற்ற வேண்டும்.

இவ்வாறு ஆணையர் கோ.பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார்.

இக்கூட்டத்தில் மாநகராட்சி மின்துறை தலைமை பொறியாளர் பி.துரைசாமி, கண்காணிப்பு பொறியாளர் ஆர்.விஜயலட்சுமி உள்ளிட்டோர் கலந்துகொண்ட னர்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT