நாகப்பட்டினம்
இரும்புச் சங்கிலியால் ஒரு கையைக் கட்டிக்கொண்டு நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் இருந்து அக்கரைப்பேட்டை வரை 10 கி.மீ தொலைவுக்கு கடலில் நீந்தி சாதனை படைத்த மாணவருக்கு நாகை மாவட்ட ஆட்சியர் பாராட்டு தெரிவித்தார்.
நாகையை அடுத்த கீச்சாம் குப்பம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த வர் சுப்பிரமணியன் மகன் சபரிநாதன்(22). இவர் நாகையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.இ. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
மாவட்ட அளவிலான நீச்சல் போட்டிகளில் கலந்துகொண்டு 700-க்கும் மேற்பட்ட தங்கப் பதக் கங்களை வென்றுள்ள சபரிநாதன், தேசிய அளவிலான போட்டிகளில் 7 தங்கப் பதக்கங்களை வென்றவர் என்பதும், கடந்த 2014-ம் ஆண்டு நைஜிரீயா நாட்டில் நடைபெற்ற உலக அளவிலான பைலாத்தான் நீச்சல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 2017-ம் ஆண்டு கை மற் றும் காலை இரும்புச் சங்கிலியால் கட்டிக்கொண்டு நாகூரில் இருந்து நாகப்பட்டினம் வரை 5 கி.மீ தொலைவை 2 மணி நேரம் 20 நிமிடம் 48 நொடிகளில் கடந்து சாதனை படைத்தார்.
இந்நிலையில், ஒரு கிலோ எடை உள்ள இரும்புச் சங்கிலியால் ஒரு கையைக் கட்டி கொண்டு மற்றொரு கையால் வேளாங்கண்ணி கடற்கரையில் இருந்து நாகை அக்கரைப்பேட்டை வரை 10 கி.மீ தொலைவை கடலில் நீந்தி உலக சாதனை செய்வதாக அறிவித்தார்.
அதன்படி, நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு ‘வில் மெடல் ஆஃப் ரெக்கார்டு' என்ற அமைப் பின் தலைவர் கலைவாணி மேற்பார்வையில், காவல் துணை கண்காணிப்பாளர் முருகவேலு இச்சாதனை நிகழ்வை தொடங்கி வைத்தார்.
சபரிநாதன், வேளாங் கண்ணி கடற்கரையில் இருந்து புறப்பட்டு நாகை அக்கரைப் பேட்டை கடற்கரை வரையிலான 10 கி.மீ தொலைவை 3 மணி நேரம் 17 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்தார்.
சபரிநாதனுக்கு அக்கரைப் பேட்டை, கீச்சாம்குப்பம் மீனவ கிராம பொதுமக்கள் தேசியக் கொடியை போர்த்தி கவுரவித்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஆட்சியர் சீ.சுரேஷ்குமார், சாதனை நிகழ்த் திய சபரிநாதனை பாராட்டினார்.