கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயந்திகுமாரி. நிலப் பிரச்சினை தொடர்பாக கொல்லங் கோடு காவல் நிலையத்தில் அவர் புகார் செய்தார். இந்த வழக்கில் இன்ஸ்பெக்டர் முத்துராமன், ஜெயந்திகுமாரியின் எதிர்தரப் புக்கு ஆதரவாக செயல்பட்ட தோடு அவரை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதைத் தட்டிக் கேட்ட ஜெயந்திகுமாரியின் வழக் கறிஞர் ஹெர்பர்ட் பெகின் என் பவரை முத்துராமன் தரக்குறை வாக பேசி மிரட்டியதாகக் கூறப்படு கிறது.
இதுதொடர்பாக இருவரும் தனித்தனியே தொடர்ந்த வழக்கு கள் குழித்துறை நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தன. இந்த வழக்கு விசாரணைகளில் கொல்லங்கோடு இன்ஸ்பெக்டர் தொடர்ந்து ஆஜராகாமல் இருந் தார். கடந்த ஒரு மாதத்துக்கு முன் இவருக்கு இரு வழக்குகளிலும் பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், ஒரு விபத்து வழக்கில் ஆஜராக குழித்துறை முதலாவது நீதித்துறை நடுவர் மன்றத்துக்கு இன்ஸ்பெக்டர் முத்துராமன் நேற்று முன்தினம் சென்றார். அப்போது, நீதிமன்ற நடுவர் ஹரிஹரகுமார், பிடி வாரண்ட் பிறப்பித்தும் வழக்கில் ஆஜராவதை தவிர்த்து வந்த முத்துராமனை நீதிமன்றப் பணி முடியும் வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன்படி, மாலை 6.30 மணி வரை அவர் நீதிமன்றத் தில் காவலில் வைக்கப்பட்டார். பின்னர், பிடிவாரண்ட் பிறப்பிக்கப் பட்ட இரு வழக்குகளிலும் இன்ஸ் பெக்டர் முத்துராமனுக்கு நீதிபதி நிபந்தனை ஜாமீன் வழங்கினார்.