திருநெல்வேலி
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 27-வது பட்டமளிப்பு விழாவில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், விடுதலை சிறுத்தை கள் கட்சி தலைவர் திருமாவளவ னுக்கு முனைவர் பட்டம் வழங்கி னார்.
இப்பல்கலைக்கழகத்தில் சமூக வியல் துறை மூலம் திருமாவள வன் முனைவர் பட்ட ஆய்வு மேற் கொண்டார். தென்காசி அருகே மீனாட்சிபுரம் பகுதியில் 1980-ம் ஆண்டுகளில் தாழ்த்தப்பட்ட சமூ கத்தை சேர்ந்த பலர் இஸ்லாம் சமயத்துக்கு மாறியது தொடர்பாக, 284 பக்க ஆய்வறிக்கையை திருமா வளவன் தாக்கல் செய்தார். ஆய்வுக்கான வழிகாட்டியாக இப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் சொக்கலிங்கம் இருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற நேர்முகத்தேர்விலும் அவர் பங்கேற்று விளக்கங்களை யும், ஆய்வு முடிவையும் தெரிவித் திருந்தார்.
இந்நிலையில், பல்கலைக் கழகத்தில் நேற்று நடைபெற்ற 27-வது பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தலைமை வகித்து, திருமாவள வனுக்கு முனைவர் பட்டம் வழங்கி னார். அப்போது, உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழ கன், துணைவேந்தர் கா.பிச்சுமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர். விழாவில் மொத்தம் 753 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது.
பழிவாங்கும் செயல்
முன்னதாக தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர் களிடம் பேசிய திருமாவளவன், “ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டி ருப்பது திட்டமிட்ட உள்நோக்கத் துடன் கூடிய பழிவாங்கும் அரசியல் நடவடிக்கை. காங்கிரஸ் கட்சியை மேலும் பலவீனப்படுத் தும் நோக்கத்தோடு இதை செய்து உள்ளனர். பணம் மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற நடவடிக்கை களால் இந்திய பொருளாதாரம் எந்த அளவுக்கு வீழ்ச்சி அடைந்தது என்பது குறித்து தொடர்ச்சியாக நாளேடுகளிலும், கட்டுரைகள் மூலமும் சிதம்பரம் வெளியிட்டார். அதற்காகவே திட்டமிட்டு இந்த நடவடிக்கைகளை பாஜக அரசு எடுத்துள்ளது” என்றார்..